Tirunelveli

News June 4, 2024

நெல்லை: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

ஓட்டு எண்ணிக்கை முடிவு: சிறப்பு குழு அமைப்பு

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தற்போது தெரிவித்ததாவது: நெல்லை பத்திரிகையாளர்கள் பாளை அரசு பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாக ஊடக மையத்திற்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்களுக்கு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்க பிஆர்ஓ தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

News June 4, 2024

இன்று ட்ரோன்கள் பறக்க தடை

image

நெல்லை பாராளுமன்ற தொகுதி ஓட்டு பெட்டிகள் அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் உள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

News June 4, 2024

நெல்லையின் மகுடம் யாருக்கு?

image

2024 மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 64.1% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் ராபர்ட் புருஸும் (காங்), அதிமுக சார்பில் ஜான்சி ராணியும், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நேரடி ஒளிபரப்புக்கு தடை

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, பாளை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அல்லது பதிவான ஓட்டுகள் விபரத்தை பதிவு செய்ய கூடாது. ஊடகவியலாளர்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் குறிப்பிட்ட 5 எண்ணிக்கை சண்ட குழுவாக குறுகிய காலத்திற்கு மட்டும் அழைத்து செயல்படுவர். ஓட்டு எண்ணும் மைய வளாகத்திற்குள் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றார்.

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் நெல்லை தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட்களுக்கான கிட்டங்கியில் பாதுகாப்பாக முத்திரையிடப்படும். ஆலங்குளம் தொகுதி இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்படும் என்றார்.

News June 3, 2024

செல்போன், ஸ்மார்ட் வாட்ச் கூடாது: முகவர்களுக்கு தடை

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, நாளை ஓட்டு எண்ணும் மையத்தில் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. வேட்பாளர்களின் முகவர்கள் பால்பாயிண்ட், பேனா, பென்சில், பேப்பர், சிறிய நோட்பேட், ஓட்டுப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் வழங்கப்பட்ட 17சி படிவம் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.

News June 3, 2024

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போலீஸ் குவிப்பு

image

நாங்குநேரி நம்பி நகர் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த 7 செங்கல் சூளைகளை நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து இன்று (ஜூன் 3) அகற்றினர். இதன் மூலம் சுமார் 2.8 ஹெக்டேர் அரசு நிலம் மீட்கப்பட்டது. போலீஸ் டிஎஸ்பி பிரசன்ன குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News June 3, 2024

டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் முக்கிய முடிவு

image

நெல்லை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு DBC ஊழியர்களுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி சட்டப்படியான சம்பளம் வழங்க கோரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மே மாதம் வேலை பார்த்த நாட்களுக்கு மாநகராட்சி சம்பளம் வழங்காததை கண்டித்து சம்பளத்தை உடனே வழங்க கோரியும்
இன்று (ஜூன் 3) மாலை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

News June 3, 2024

நள்ளிரவில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை

image

நாங்குநேரி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு நாங்குநேரி சுங்கச் சாவடியில் கட்டணம் உயர்ந்தது. அதன்படி ஒரு வழி பயணத்திற்கு கார், ஜீப் கட்டணம் ரூ.110, மினி பஸ், வேன் ரூ.180, பேருந்து ரூ.375, மூன்று அச்சு வாகனங்கள் ரூ.410, நான்கு அச்சு வாகனங்கள் ரூ.590, ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.715 என உயர்ந்தது.

error: Content is protected !!