India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி இரண்டு முறை நெல்லை மாவட்டத்திற்கு வந்து பிரச்சாரம் செய்தார். முதலில் நெல்லை மாவட்டத்தில் அறிமுகம் கூட்டம் நடத்தினார். பின்னர் அம்பை அருகே உள்ள வி.கே.புரத்தில் பிரச்சாரம் கூட்டம் நடத்தினார். இதனால் நெல்லை தொகுதி பாஜக வசம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக பின்னடைவில் உள்ளது.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மண்ணின் மைந்தர்களான பிஜேபி நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ராபர்ட் ப்ரூஸ் என்பவர் நிறுத்தப்பட்டார். மண்ணின் மைந்தர்கள் மூன்று பேரையும் தோற்கடித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.இந்த நிலையில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நெல்லை பாராளுமன்ற தொகுதி நிலவரம் 22 வது சுற்றும் முடிவுகள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இதன்படி,
காங்கிரஸ் 494150
பாஜக 331369
நாம் தமிழர் 85724
அதிமுக 88055
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 162781 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார் இன்னும் ஒரு சுற்று மட்டுமே பாக்கி உள்ளதால் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி விளிம்பில் உள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், 17வது சுற்று விவரம்:
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1,33,196 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் – 3,96,486 வாக்குகள்
பா.ஜ.க – 2,63,290 வாக்குகள்
அதிமுக – 70,205 வாக்குகள்
நா.த.க. – 69,740 வாக்குகள்
நாம் தமிழரை பின்னுக்கு தள்ளி, 17வது சுற்று முடிவில் அதிமுக 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் 8,35,250.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 16 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாம் தமிழர் கட்சி 66,658 வாக்குகள் பெற்ற மூன்றாம் இடத்திலும், அதிமுக 66,310 வாக்குகள் பெற்றும் நான்காம் இடத்திலும் உள்ளனர். இந்த இரண்டு கட்சிக்கும் 348 வாக்குகள் வித்தியாசம் உள்ளதால் 3,4வது இடத்திற்கு போட்டி நிலவி வருகிறது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 16வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1,19,004 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
காங். – 3,70,283
பாஜக – 2,51,279
நாதக – 66,658
அதிமுக – 66310
16ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. எனினும் நாம் தமிழர் கட்சியை நெருங்கி வருகிறது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 7,92,035

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 15வது சுற்றின் முடிவில் 1,11,381 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2,35,476 வாக்குகள் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
14வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 99,452 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
காங். – 3,20,534
பாஜக – 2,21,082
நாதக – 59,781
அதிமுக – 56,740
14ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 6,90,589

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) அரசு பொறியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் 14வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 3,20,534 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் காரணமாக வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.