India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வு ஏதும் இருந்தால் அவர்களுக்கு இந்த விடுமுறை செல்லாது. இதற்கு பதிலாக 29ஆம் தேதி உள்ளூர் வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பாஜக நெல்லை மாவட்ட துணைத் தலைவர் முருகதாஸ் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு நேற்று (ஜூன் 6) அளித்தார். அந்த மனுவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அவமதிக்கும் நோக்கத்தில் ஆட்டின் கழுத்தில் அவரது பெயரை எழுதி வைத்து அதனை சாலையின் நடுவில் பலியிடுகிறார்கள்; இது கண்டிக்கத்தக்க செயல். இந்தச் செயலில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நெல்லை மாவட்டம் குன்னத்தூர் ராக்கன் திரடு பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி செண்டு. இவருடைய மகள் சரஸ்வதி. இந்த மாணவி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியிலேயே அரசு பள்ளியில் கல்வி கற்றுள்ளார். இந்த வருடம் (2024) நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 628 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான்சி ராணி டெபாசிட் இழந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 6) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது டெபாசிட் இழக்கும் அளவிற்கு நெல்லையில் நடந்தது என்ன? என்பது குறித்து வேட்பாளர் விரிவாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் இன்று (ஜூன் 7) மாலை 3 மணிக்கு கலெக்டரை சந்திக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து நாளை மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்திக்கின்றனர்.

நாங்குநேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் கந்து வெட்டி கேட்டு மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் இன்று (ஜூன் 6) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க சிலம்பரசன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். காவலரே கந்துவட்டி கேட்டு மிரட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வினை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வு நாளை நடைபெற இருந்த நிலையில் தேர்வானது ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் இன்று(ஜூன் 6) அறிவிக்கப்பட்டுள்ளது .

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனிமொழி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இருவரும் நேற்று (ஜூன் 5) சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட துறை வைகோ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை திருநெல்வேலி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கே எம் எ நிஜாம் நேற்று( ஜூன் 5) மாலை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.