Tirunelveli

News June 8, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் இன்று (ஜூன் 8) குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற கூடாது என்பதற்காகவே இந்த சோதனைகள் நடைபெறுவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

News June 8, 2024

நெல்லை பல்கலையில் விண்ணப்ப தேதி மீண்டும் நீட்டிப்பு

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் நேற்று (ஜூன் 7) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்கலைகழகத்தில் அனைத்து முதுகலை பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து பயில இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

ஜெயக்குமார் மரண வழக்கு: கூடுதல் சிபிசிஐடி போலீசார்

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கை நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று(ஜூன் 7) முதல் விசாரணைக்கு துணையாக தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி போலீசார் ஜெயா பிரின்சஸ் தலைமையிலும், குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலும் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

News June 8, 2024

எஸ்டிபிஐ கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

image

எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க அணியான எஸ்டிபியூ நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக இன்று வண்ணாரப்பேட்டை டிப்போ எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆரிப் பாதுஷா அழைப்பு விடுத்துள்ளார்.

News June 8, 2024

நெல்லை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

நெல்லை, தென்காசி, குமரியில் மாவட்டங்களில் இன்று(ஜூன் 8) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.

News June 7, 2024

நயினார்க்கு அமைச்சர் பதவி? தென் மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்ப்பு

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும்,  கடந்த முறை போல் இந்த முறையும் தமிழகத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கட்சி வளர முக்கிய நபர்களில் ஒருவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என பாஜக கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News June 7, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இன்று 7.6.2024 (இரவு7 மணி வரை) திருநெல்வேலி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News June 7, 2024

அமைச்சரை சந்தித்த நெல்லை திமுக செயலாளர்

image

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் பொறுப்பு அமைச்சரும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனை இன்று(ஜூன் 7) திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றிக்கு கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மேற்கொண்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

News June 7, 2024

நெல்லையில் வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

image

நெல்லை மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் சேவையானது மாவட்ட நிர்வாகம் சார்பாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் பணிபுரிய ஓட்டுனர், ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கு நேர்காணல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை(ஜூன் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்போர் அசல் கல்வி சான்றிதழ் மற்றும்  ஓட்டுனர் உரிமம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 7, 2024

தேர்தல் விதிமுறை நிறைவு: மனு பெட்டி அகற்றம்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த மனு பெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் கலெக்டரை நேரடியாக சந்தித்து மனுநீதி நாளில் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனி நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!