India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நெல்லை மக்களவைத் தொகுதியில் நேற்று (மார்ச் 25) மட்டும் 6 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஏற்கனவே சுயேச்சை வேட்பாளர் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் நெல்லை மக்களவைத் தொகுதியில் இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே நேற்று (மார்ச் 25) மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். இதில் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்துகொண்டனர்.
பிரபல தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஹரி நாடார் இன்று (மார்ச் 26) காலை நெல்லைக்கு வருகை தருகின்றார். அவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கராத்தே செல்வின் நாடார் நினைவு இடத்தில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது . காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நியமிப்பதில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இன்று (மார்ச் 25) ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்பொழுது அவர் மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் இழுப்பறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது ராப்ர்ட் புரூஸ் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாங்குநேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை, கன்னியாகுமரி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்களால் மாபெரும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறினார்.
நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளராக பீட்டர் அல்போன்ஸ் அறிவிக்கப்பட உள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது, நெல்லை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை இந்நிலையில் இன்று ( மார்ச் 25 ) மாலைக்குள் பீட்டர் அல்போன்ஸ் அறிவிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் பல்வேறு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 25) மாலைக்குள் வேட்பாளர்கள் திருநெல்வேலி தொகுதியில் அறிவிக்கப்படுவார்கள் என இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் திமுக போட்டியிட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளரை தேர்வுசெய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டு முடிவு எட்ட முடியாமல் அக்கட்சியினர் திணறி வருகின்றனர். இதனால் இன்று (மார்ச் 25) மாலைக்குள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கவில்லை எனில் திமுக தனது வேட்பாளரை தன்னிச்சையாக அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.