India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நாளை (மார்ச் 27) மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து, வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கிழக்கு மாவட்ட தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு பிஜேபி, அதிமுக, சுயேட்சை உட்பட 3 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இன்று (மார்ச் 26) நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்கள் உட்பட 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆகவே, இதுவரை மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு, கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சார்பாக நிறுவனர் அதிசய பாண்டியன் கருப்பு சட்டை அணிந்து, நெல்மணியை மாலையாக கோர்த்து, கழுத்தில் பச்சை துண்டுடன், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 26) காலை வந்தார். இதனால் கொக்கிரகுளம் சிக்னல் அருகே பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) இரவு நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக அவர் விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை நெல்லை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு வருகை தந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து தனியார் தொலைக்காட்சியின் பிரச்சார பயண விழிப்புணர்வு வாகனத்தினை இன்று (மார்ச் 26) திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று திடீரென சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுதும் மாணவர் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் குறித்து தேர்வு மையப் பொறுப்பாளர்களிடம் விசாரித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் துறையில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மீனா. இந்த மாணவி அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலில் சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார். இந்த மாணவிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வெட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சிபிஐஎம்எல் முடிவு செய்துள்ளது. நெல்லையில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று (மார்ச் 25) இரவில் சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் சங்கரபாண்டியன், ரமேஷ் ஆகியோர் சென்று மாவட்ட செயலாளர் மைதீன் கானை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பிரச்சாரத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நேற்று (மார்ச் 25) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜகவில் நான் இருந்தாலும் எனக்கு அறிமுகம் கொடுத்தது அதிமுகதான் எனவே தேர்தல் சுவரொட்டிகளில் பிரதமர் மோடி எம்ஜிஆர் அண்ணாமலை போன்றவர்களின் படங்கள் இடம்பெறும் என்றார்.
Sorry, no posts matched your criteria.