India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக கடைசி நேரத்தில் இருவர் இன்று (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ராமசுப்பு மற்றும் தேசிய நிர்வாகி வானமாமலை ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இல்ல நிகழ்ச்சி இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். மேலும், இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றார். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர் எதிர் கட்சிகளான அதிமுக, பாஜக நிர்வாகிகள் ஒரே மேடையில் சங்கமித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தினம்தோறும் பல்வேறு விபத்துக்கள் குறித்தும், சாலை விதிகள் விழிப்புணர்வு குறித்தும் அறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோவை தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தையின் உயிரை பணயம் வைக்காதீர்கள்” என தெரிவித்துள்ளனர்.
இண்டி கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கிற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக நவாஸ் கனி எம்பி போட்டியிடுகிறார். இவர் இன்று (மார்ச் 27) மேலப்பாளையத்தில் தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் ஹாஜி காஜா மொய்னுதீன் பாகவியை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஐயூஎம்எல் நெல்லை மாவட்ட தலைவர் மீரான் முகைதீன், செயலாளர் பாட்டபத்து முகமது அலி உடன் இருந்தனர்.
நெல்லை அதிமுக மாநகர செயலாளர் தச்சை கணேச ராஜாவின் இல்ல திருமண விழா இன்று காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று இரவு (மார்ச் 26) அதிமுக சார்பில் டவுனில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட செயலாளர் இல்லத்துக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று (மார்ச் 27) செய்தியாளரிடம் கூறும்போது, இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும். நான் வெற்றிபெறும் பட்சத்தில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக நெல்லை தொகுதியை மாற்றிக் காட்டுவேன், ஒரு சட்டசபை தொகுதிக்கு மட்டும் செய்துவந்த மக்கள் பணி ஆறு தொகுதிகளுக்கும் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்று கூறினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான்சி ராணிக்கு நெல்லை டவுனில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பிரதமருடன் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களை காண்பித்து நான் சிரித்தால் தவறு, நீங்கள் சிரித்தால் சரியா? என கேள்வி எழுப்பினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா இன்று (மார்ச் 26) தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது உறுதிமொழி படிவத்தை வாசிக்கும் போது பிரபாகரன் மீது உறுதியிட்டு கூறுகிறேன் என வாசித்தார். அதை ஏற்க மறுத்த தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கார்த்திகேயன் பேப்பரில் இருப்பதை மட்டும் மீண்டும் வாசிக்க செய்தார்.
நெல்லை பழைய பேட்டை பகுதியில் இன்று (மார்ச் 26) ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண் ஒருவரை பேட்டை போலீசார் நெல்லை மாநகராட்சி தொண்டு நிறுவன அமைப்பில் ஒப்படைத்தனர். இந்த பெண் தனது பெயர் ஜீவா என்றும் ஆவுடையானூர் சொந்த ஊர் என்றும் சொல்கிறார். இவர் குறித்த விபரங்களை தெரிந்தவர்கள் 9976649066 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என “ஆர்- சோயா” தொண்டு நிறுவன அமைப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.