India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லைக்கு அல்வா மட்டும் இல்ல படுத்து தூங்கும் பாயும் பேமஸ் தாங்க. இது சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள பத்தமடையில் தயார் செய்யப்படுகிறது. நெல்லை வரும் விஐபிகளுக்கு, நினைவுப் பரிசாக “பத்தமடை பாய்” வழங்கப்படும். இங்கிலாந்தில் உள்ள அரண்மனையில் அலங்கார பொருளாகவும், ஒரு முறை இப்பாயை பார்த்து விக்டோரியா மகாராணியே வியந்துள்ளார். இப்பாயிக்கு 2013ஆம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

நெல்லையில் இன்று சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். பேசிய அவர், மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்றார்

நெல்லை வேளாண் இணை இயக்குநர் முருகானந்தம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் நெல்லை விவசாயிகளிடம் பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள், உழவர் செயலி, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

நெல்லை மாவட்ட சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

பாளை பகுதியைச் சேர்ந்த வள்ளிநாயகம் கடந்த 6ம் தேதி தச்சநல்லூர் சிவன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்ற போது அங்கு வந்த ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த சிவபெருமாள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது குறித்து வள்ளிநாயகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவபெருமாளை நேற்று கைது செய்தனர். இவர் பாஜக நிர்வாகி ஆவார்.

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் அருகே இன்று(ஜூன் 15) வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். சிறில் என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்களுக்கு, காதலர்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை எப்பொழுதும் அணுகலாம் என
நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்ரீராம் இன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்திலும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ஓர் இளம் ஜோடி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பிரச்சனை உருவானது. இதனையடுத்து அந்த ஜோடி க்கு உதவியதால் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நேற்று (ஜூன்14) ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பெண்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள்
குறைதீர்க்கும் முகாம் தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.