India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், 11 பேர் திருநெல்வேலி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று (மார்ச் 28) ஆஜராகினர். இதில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாநகர வி.எம்.சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணன். இவர் நேற்று(மார்ச் 28) புறவழிச் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வரை நெல்லையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோயிலில் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறத்தல் .
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவரது மனைவி முருக ஜோதி(29). குடும்ப பிரச்னை காரணமாக முருக ஜோதி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(மார்ச் 28) வீட்டில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சோனாலி பென்ஷோ வயங்கங்கர் 94899 63626, பங்கஜ் நைன் 9489 963739, காசி சுஹைல் அனீஸ் 94899 63627 என்ற எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று(மார்ச் 28) தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவர் கமலேஷ் மகேந்திரா நேற்று மாயமானார். இது குறித்த புகாரில், ஜெயேந்திரா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனை போலீசார் திவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டவுண் அருகே சுற்றிக்கொண்டிருந்த கமலேஷை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் இன்று(மார்ச் 29) இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக செல்கிறது. மறு மார்க்கத்தில் நாளை(மார்ச் 30) மாலை 4:30 மணிக்கு நாகர்கோயிலில் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு நெல்லை வந்து, பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்கிறது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 26 மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்கப்பட்டன. 27 மனைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு வாபஸ் தேதிக்கு பின் இறுதிப் போட்டியாளர்கள் விபரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு நடத்தப்படும், “TNSET 2024” தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று (மார்ச் 28) செய்தி வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகே உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தாளாளராக தற்போதைய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று (மார்ச் 28) தாளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.