India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு நெல்லை அடுத்துள்ள கங்கைகொண்டான் சோதனை சாவடியில் நேற்று (மார்ச்.30) போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் அனுமதி பெறாமல் வைத்திருந்த எஸ்பிபிஎல் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது.
மக்களவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 30) இறுதி வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் இறுதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி 23 வேட்பாளர்கள் பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்ட சின்ன மற்றும் அவரது புகைப்படத்துடன் கூடிய பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று (மார்ச் 30 வெளியிட்டார். இதில் பாஜக முதல் இடத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி 2வது இடத்திலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் அதிமுக 4வது இடத்திலும் உள்ளது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர் 7வது இடத்தில் உள்ளது.
நெல்லை மக்களவை தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், அதிமுக மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் ஆகியவற்றின் வேட்பாளர்கள் 5 பேர், 18 சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று 3 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணி நெல்லையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.15 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் உள்ளதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
சினிமா பிரபலமும், அதிமுக பிரமுகருமான நடிகை விந்தியா திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அதிமுக தேர்தல் பணிக்குழு தெரிவித்துள்ளது.
INDI கூட்டணியின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று (மார்ச் 29) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில இணைத்தலைவர் மகேந்திரன், திருநெல்வேலி மாநகர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ் பங்கேற்றனர்.
நெல்லை: தருவை அருகே புது காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மதன் நேற்று (மார்ச் 28 ) காலை திடீரென்று நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட தேமுதிகவினர் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூசை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வருகிற ஒன்றாம் தேதி மாலை 4 மணிக்கு வள்ளியூர் காமராஜர் சிலை அருகே பேசுகிறார். இரண்டாம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி டவுன் வாகையடி முனை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என தேர்தல் பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.