India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் தொழிலாளர்கள் மே தின உறுதிமொழி எடுத்தனர். பேட்டை சுத்தமல்லி விலக்கில் ஜனநாயக சுமை தூக்கும் தொழிலாளர் இன்று (மே.1) மே தினம் கொண்டாடினர். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மே தின உறுதி ஏற்பு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் அன்புச்செல்வி செல்வம் உட்பட 13 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கினாலும் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 1) வெளியிட்டுள்ள மழை அளவு செய்தி குறிப்பில் அதிகபட்சமாக காக்காச்சி பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 18 மீட்டர் மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை தெரிவிக்க திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகம் சார்பில் இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடர்பு எண் வெளியிட்டுள்ளனர். அதில் திருநெல்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் (83000 70283), காவல் ஆய்வாளர் (94981 20504), சார்பு ஆய்வாளர் (94981 95193) ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி நெல்லை மாநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் “ஸ்டிராமிங் ஆபரேஷன்” என்ற பெயரில் போலீசார் நேற்று (ஏப்ரல் 30) காலை முதல் இரவு வரை தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு ஒரே நாளில் 730 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்ஷனாவின் 3வது சாதனை நிகழ்வாக ஓராண்டு உழைப்பால் தாம்பூலத்தில் உருவாக்கிய ஓவியங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நேற்று (ஏப்ரல் 30) மாலை நடைபெற்றது. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சௌந்தர மகாதேவன் இந்த கண்காட்சியினை பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் நாகராஜை நேற்று (ஏப்.30) கைது செய்தனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் போக்சோ சட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் பாளையங்கோட்டையில் வைத்து வரவேற்பு விழா மற்றும் சிறந்த சமையல் குழுவிற்கு பாராட்டு விழா நேற்று (ஏப்.30) நடைபெற்றது. எம்ஜிஆர் குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் கோவிந்தராஜன் கலந்துகொண்டு மேலப்பாளையத்தை சேர்ந்த நண்பர்கள் சமையல் கேட்டரில் குழுவிற்கு முதல் பரிசாக தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று (ஏப். 30) மூன்றாம் கட்ட தேர்தல் வேட்பாளருக்காக ஆதரவு திரட்டினார். நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆந்திர மாநிலம் நெல்லூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜூவை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக்களை சந்தித்து தீவிர ஆதரவு திரட்டினார்.
திருநெல்வேலில் மாவட்டத்தில் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை 7 மணி வரை நெல்லை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழறிஞர் கா.சு.பிள்ளை 79வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஏப்.30) திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் நினைவு ஸ்தூபிக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரன் சுப்பிரமணியன், பேத்தி அழகம்மாள் மற்றும் குடும்பத்தினர், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.