Tirunelveli

News May 2, 2024

பிரதான அணைகளின் இன்றைய நிலவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மே 2) காலை நிலவரப்படி நீர் இருப்பு 57.20 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 254.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது . இதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 88.70 கன அடியாக உள்ளது. இதிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

News May 2, 2024

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வேண்டுகோள்

image

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வரும் 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 2, 2024

பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் விடுமுறையில் வீட்டில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த உறுதுணையாக இருங்கள் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

News May 2, 2024

தொடர்ந்து அச்சுறுத்திய 3 பேருக்கு குண்டாஸ்

image

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் கைதாகிய ஆறுமுகம், அழகர், முத்துப்பாண்டி ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்கள் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

News May 2, 2024

நெல்லை: 103 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா தலைமையில் மே தின விடுமுறை நாளில் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 103 நிறுவனங்களில் மே விடுமுறை தின சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News May 2, 2024

நெல்லை: கோயிலில் புகுந்து நகை திருட்டு

image

மூன்றடைப்பு அருகே உள்ள தாழைகுளத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று (மே 1) அதிகாலை மர்மநபர் கோயில் பூட்டை உடைத்து புகுந்து அம்மன் சிலையில் இருந்த 3 பொட்டு தங்க தாலியை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அபிஷேக் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.

News May 1, 2024

தமிழ்நாட்டில் இங்குதான் அதிக மழை பதிவு

image

பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மார்ச் 1 முதல் நேற்று ஏப்ரல் 30 வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 212 மிமீ மழையும் மாஞ்சோலையில் 209 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மே மாதத்திலும் மாஞ்சோலையில் அதிக மழை பெய்யும் என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

சேரன்மகாதேவி அடுத்த சக்தி குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா மகன் முருகன் (56). விவசாயியான இவரது வீட்டில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பெட்ரோல் குண்டு மர்ம நபர்களால் வீசப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 1, 2024

மே தின உறுதிமொழி எடுத்த தொழிலாளர்கள்

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் தொழிலாளர்கள் மே தின உறுதிமொழி எடுத்தனர். பேட்டை சுத்தமல்லி விலக்கில் ஜனநாயக சுமை தூக்கும் தொழிலாளர் இன்று (மே.1) மே தினம் கொண்டாடினர். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மே தின உறுதி ஏற்பு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் அன்புச்செல்வி செல்வம் உட்பட 13 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

News May 1, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 மிமீ மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கினாலும் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 1) வெளியிட்டுள்ள மழை அளவு செய்தி குறிப்பில் அதிகபட்சமாக காக்காச்சி பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 18 மீட்டர் மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

error: Content is protected !!