Tirunelveli

News May 3, 2024

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட மாவட்ட செயலாளர்

image

உலக பத்திரிகையாளர்கள் சுதந்திர தினம் இன்று (மே 3) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மணி பாண்டியன் இன்று (மே 3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த பத்திரிகையாளர்கள் சுதந்திர தின தினத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் சுதந்திரத்துடன் செயல்பட வாழ்த்து தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

நெல்லை: இந்த ரயிலில் விரைவில் கூடுதல் பெட்டிகள்

image

திருநெல்வேலி வழியாக திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் விரைவு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இரு மார்க்கத்திலும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த ரயிலில் பயணிகள் கோரிக்கையின்படி விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா செய்தியாளர்களிடம் நேற்று (மே 2) தெரிவித்தார்.

News May 3, 2024

மத்திய அரசை கண்டித்து கண்டன போஸ்டர்கள்

image

பாளை மகாராஜா நகர் ரயில்வே கேட்டை அடைத்து வைத்து பொதுமக்கள் பாதசாரிகள் ஊனமுற்றோருக்கு இடையூறு செய்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், மனித நேய மக்கள் கட்சி நெல்லை மாவட்டம் சார்பில் மாநகர் முழுவதும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மாநகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News May 3, 2024

குடிநீர் தட்டுப்பாடு: கட்டுப்பாட்டு எண் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடைகால நோய் பாதிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் மருத்துவ ஆலோசனை பெற 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை வராமல் கண்காணிக்கப்படுகிறது. குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் “வணக்கம் நெல்லை” கட்டுப்பாட்டு அறை எண் 9786566111 என்ற கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

News May 3, 2024

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

பத்தாம் வகுப்பு தேர்வில் தவறிய மற்றும் ஏற்கனவே பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு வசதியாக வருகிற 10ம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன. நெல்லை மாவட்டத்தில் சிறப்பு வகுப்பில் கல்வி மேலாண்மை தகவல் மையம் தளத்தில் மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும். இதை தகுதி உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 3, 2024

வெயில்: கலெக்டர் முக்கிய எச்சரிக்கை

image

வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி நெல்லையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். எனவே கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசர தேவை இன்றி வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (மே 2) விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 3, 2024

வாக்கு எந்திரங்களை பார்வையிட்ட வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் கல்லூரி வளாகத்தை திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று (மே 2) மாலை அவற்றை பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர்.

News May 3, 2024

நைனார் நாகேந்திரன் உறவினரிடம் சிபிசிஐடி விசாரணை

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மார்ச் 26இல் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.நேற்று (மே 2) நயினார் உறவினர் முருகன் ஆசைத்தம்பி ஆகியோரிடம் டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

News May 2, 2024

கடையில் வாங்கிய முறுக்கில் இறந்து கிடந்த பூரான்

image

நெல்லை உடையார்பட்டியில் வசிக்கும் குரு மகாராஜன் நெல்லை தனியார் ஸ்வீட் ஸ்டாலில் முறுக்கு வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிட பிரித்து பார்த்தபோது அதில் பூரான் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று (மே 2) குரு மகாராஜன் உணவு பாதுகாப்பு துறை தலைமை ஆய்வாளருக்கு புகார் அனுப்பி உள்ளார்.

News May 2, 2024

நெல்லை அழகிய மணிமுத்தாறு அருவி!

image

நெல்லையில், மாஞ்சோலை மலைக்கு அருகில் உள்ளது இந்த அழகிய மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி. 65 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக, மணிமுத்தாறு அணை 1958 இல் கட்டப்பட்டது. தாமிரபரணி ஆறு கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க காமராஜரால் கட்டப்பட்டது. அணைகட்டுடன் இருப்பதால் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கழிக்க இந்த இடம் ஏற்றதாக உள்ளது. மழைக்காலங்களில் வெள்ல நீராக ஆர்ப்பரித்து காட்சியளிக்கும்.

error: Content is protected !!