India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர்கள் கூறிவருவதால் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதனால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி சாஜி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே சிறையில் முன் விரோதம் இருந்துவருகிறது. நேற்று (மே. 3) மாலையில் அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் காயம் அடைந்த சாஜி, அருள், துளசி ஆகியோர் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து துணை ஜெய்லர் முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவு தேர்வு நாளை (மே 5) நடைபெறுகிறது. இதற்காக நெல்லை மண்டலத்தில் 14 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 7441 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். அதிகபட்சமாக வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ் . பொறியியல் கல்லூரி மையத்தில் மட்டும் 960 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. வள்ளியூர் மற்றும் பாளையில் உள்ள 2 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து விடைத்தாள்கள் நேற்று திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 800 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை சுகாதார ஆய்வாளர் கீதாராணி விடுத்துள்ள செய்தி குறிப்பில், அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளை (மே.4) தொடங்குவதால் பொதுமக்கள் அவ்வப்போது ஓஆர்எஸ் கரைசல் பருக வேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் 16 இடங்களிலும், ஊராட்சியில் 27 இடங்களிலும் என 43 இடங்களிலும் 42 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10 மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் என 95 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெல்லையிலிருந்து திருச்சி வழியாக காசி, திருவேணி சங்கமம், அயோத்தி மற்றும் கயா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர IRCTC சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுலா ரயில் மொத்தம் ஒன்பது நாட்கள் பயணம் செய்கிறது. இந்த ரயிலில் ஒரு நபருக்கு ரூபாய் 18 ஆயிரத்து 550 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே இன்று (மே.3) வெயிலில் இளைஞர் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானார். சிங்கி குளத்தைச் சார்ந்த இளைஞர் ஐகோர்ட் ராஜா(35) காடுவெட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடும் வெயிலால் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்த அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (மே 3) மதிய நிலவரப்படி நெல்லை மாநகரில் 106 டிகிரி ஃபாரண்ஹிட் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மாநகர சீவலப்பேரியை சேர்ந்த பேச்சிமுத்து நேற்று (மே 2) தனது மனைவி பேச்சியம்மாளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பேச்சியம்மாள் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக பத்திரிகையாளர்கள் சுதந்திர தினம் இன்று (மே 3) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மணி பாண்டியன் இன்று (மே 3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த பத்திரிகையாளர்கள் சுதந்திர தின தினத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் சுதந்திரத்துடன் செயல்பட வாழ்த்து தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.