India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் மரண வழக்கை தற்போது சிபிசிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை குற்றவாளிகளை கண்டறியவில்லை. இந்த நிலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றால், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த பாஜக ஆய்வு கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை முதுநிலைக்கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், பள்ளி மாணவர்கள் கல்வி உதவி பெற ஏதுவாக அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பாளை,நெல்லை ஸ்ரீபுரம் மற்றும் அம்பை தலைமை அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்செந்தூர் அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் கூறுகையில், திருச்செந்தூர் – நெல்லை இடையே ‘பிபிஆர்’ என்று குறிப்பிடப்பட்டு சில பஸ்களில் மட்டும் கட்டணத்தை உயர்த்தி ரூ.56 ஆக வசூலித்து வருகிறோம். மற்ற பஸ்களில் வழக்கம் போல் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்றார்.

நெல்லையில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதி ரீயில் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாதிய மோதல்கள் தொடர்கதையாகியுள்ளது. பள்ளிகளில் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 11 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கார்த்திகேயன் நேற்று(ஜூலை 1) உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் செல்வன் அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராக நியமனம். நெல்லை தனி மாவட்ட வருவாய் அலுவலக கண்காணிப்பாளர் கந்தப்பன் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று சிப்காட் நிறுவன நில எடுப்பு(அலகு 4) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜூலை 1) கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின கணக்குகளை நேர் செய்யும் கூட்டம் இன்று (ஜூன் 1) கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தேர்தல் செலவினை பார்வையாளர்கள் காசி சுகை , அனீஸ் அகமது ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். 6 வேட்பாளர்கள் தங்கள் கணக்குகளை மூன்றாம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் ஜூலை மாதம் நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை 2ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 5ம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 12ம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 19ம் தேதி நெல்லை நகர்புற கோட்ட அலுவலகத்திலும் பகல் 11 மணிக்கு குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் அறிவித்துள்ளார்.

நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேயர் சரவணனுக்கு திமுக கவுன்சிலர்களே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜினாமா கடிதத்தை சென்னையில் அமைச்சர் கே,என்.நேருவை சந்திந்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அந்த மக்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. 100 ஆண்டுகளாக வசிப்பவர்களை கட்டாய விருப்ப ஓய்வு கடிதம் பெற்று வெளியாற்ற நினைப்பத்தாக கூறினார். இன்று(ஜூலை 1) மாஞ்சோலை மக்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.