Tirunelveli

News July 4, 2024

நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கேரளத்திற்கு ரயில் சேவை; எம்பி கோரிக்கை

image

திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ், ரயில்வே போர்டு சேர்மன் ஜெயவர்மா சின்காவை நேற்று (ஜூலை 3) நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் நெல்லை, செங்கோட்டை, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக சர்குலர் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். நெல்லை – பாலக்காடு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 4, 2024

நெல்லை: தொடக்கம் முதலே மோதல் போக்கு!(1/3)

image

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாநகராட்சி 16வது வார்டில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த பி.எம்.சரவணன் மேயராக தேர்வானார். தொடக்கம் முதலே மேயர்-கவுன்சிலர்கள் இடையே மோதல்போக்கு காணப்பட்ட நிலையில் மாதம்தோறும் நடைபெறும் கூட்டங்களில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே மேயர் ‘ராஜினாமா’ என்ற பேச்சு உலாவிய நிலையில் நேற்று பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியானது.

News July 4, 2024

குடும்ப சூழ்நிலையால் ராஜினாமா – கமிஷ்னர்(2/3)

image

மேயர் சரவணன்-கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சென்னைக்கு வருமாறு நேற்று முன்தினம் கட்சித் தலைமை அழைப்பு விடுத்தது. இதை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் மேயர் ராஜினாமா செய்ததாக மாநகராட்சி ஆணையர் சுபம் ஞானதேவ் ராவுக்கு கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 4, 2024

ஜூலை 8 ஆம் தேதி மாநகராட்சி கூட்டம்(3/3)

image

நெல்லை மாநகராட்சியில் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 44 திமுக கவுன்சிலர்கள், 4 காங்கிரஸ் கவுன்சிலர்கள், மார்க்.கம்யூனிஸ்ட் -1, இ.முஸ்லீம் லீக் -1, மதிமுக -1 மற்றும் அதிமுகவில் 4 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக கூட்டணியில் மட்டும் 51 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், மேயர் ராஜினாமா குறித்த கூட்டம் ஜூலை 8 ஆம் தேதி துணை மேயர் ராஜூ தலைமையில் நடைபெற உள்ளது. இது நெல்லை அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

News July 4, 2024

திமுக மகளிர் அணி அமைப்பாளர் பதவிக்கு அழைப்பு

image

நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தெரிவித்தாவது, நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், கழகங்களுக்கு மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி பொறுப்புகளுக்கு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். விருப்பமுள்ள மகளிர் ஜூலை 8 ஆம் தேதிக்குள் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

News July 3, 2024

பொறுப்பு மேயராக துணை மேயர்-ஆணையாளர் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் வருகின்ற ஜூலை 8ம் தேதி துணை மேயர் ராஜு தலைமையில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஜூலை 3) அறிவித்துள்ளார். மேலும் மேயர் சரவணன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து பொறுப்பு மேயராக துணை மேயர் ராஜு செயல்படுவார் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

நெல்லை மேயர் ராஜினாமா

image

நெல்லை திமுக மேயர் சரவணன் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயர் சரவணனுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திமுக தலைமை உத்தரவை தொடர்ந்து நெல்லை, கோவை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News July 3, 2024

நெல்லை கலெக்டர் தகவல்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 3 ) விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, அம்பை, ராதாபுரம் ஐடிஐ கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க வருகிற 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

நெல்லை: ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

image

மாஞ்சோலை விவகாரத்தில், அந்த மக்களுக்கு ஆதரவாக ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக, புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று(ஜூலை 3) பேட்டியளித்துள்ளார். அப்போது, மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என்றும், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!