India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் நெல்லையை சேர்ந்த மாணவி 2ஆம் இடம் பிடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2 ஆம் இடம் பிடித்துள்ளார். செங்கல்பட்டு மாணவி முதல் இடமும், நாமக்கல் மாணவர் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு இம்மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நெல்லை மேயர் ராஜினாமா செய்த நிலையில் மாத இறுதியில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகளுக்கு மத்தியில் மேயர் ராஜினாமா செய்த நிலையில் பொறுப்பு மேயராக தற்போது துணை மேயர் ராஜூ உள்ளார்.

கூடங்குளம் 2 ஆவது அணு உலையில் நேற்று முன்தினம் மின் உற்பத்தி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும் பழுது ஏற்பட்டது.
இந்த பழுது நேற்று இரவு 7.43 மணி அளவில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக இன்று மாலைக்குள் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று(ஜூலை 10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (9.7.24) அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், நெல்லை மாவட்டத்தில் 2ம் கட்டமாக ’மக்களுடன் முதல்வர்’ திட்டம் வரும் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 22 வரை 204 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 15 துறைகளின் சேவைகள் அந்த ஊர்களுக்கு நேரில் சென்று, முகாம் மூலம் வழங்கப்படும். மனுக்களை பதிவு செய்ய இ.சேவை மையங்களில் 50 சலுகை கட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் மற்றும் பிற நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ESI திட்ட பயனாளர்களுக்கான மாதாந்திர குறைதீர் முகாம் நாளை(ஜூலை 10) மாலை 4 மணிக்கு, ESI துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், ESI மருத்துவ கண்காணிப்பாளர், மண்டல பொறுப்பு அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குறைகள் இருப்பின், பயனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம் என நெல்லை மண்டல ESI துறை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா இன்று அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை, மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மாஞ்சோலை விவாகரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பலூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மற்றும் அதன் பின்புலத்தில் உள்ள அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.