India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கே.டி.சி. நகர் டீச்சர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அப்பகுதியில் ஒர்க் ஷாப்பில் வேலை செய்துவருகிறார். இவர் தனது மனைவியைப் பிரிந்து 2வது திருமணம் செய்ததால் மனைவி குடும்பத்திற்கும் இவருக்குமிடையே விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில் நேற்று (மே 9) மணிகண்டனை 3 பேர் கொண்ட கும்பல் ஒர்க் ஷாப்பில் வைத்து சரமாரியாக வெட்டியது. காயமடைந்த மணிகண்டன் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பவளமாலை அலங்காரத்தில் காட்சியளித்தார். நெல்லையப்பர் கோவில் வசந்த விழாவின் 16ம் நாள் நிகழ்ச்சியில் நேற்று (மே 9) இரவு சுவாமி காந்திமதி அம்பாளுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. அப்போது நெல்லையப்பர் பவள மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் பாபநாசம், காரையார் அணை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பாண தீர்த்தம் அருவி. காரையார் அணையிலிருந்து 15 நிமிடம் படகில் பயணித்து இந்த அருவியை அடையலாம். ஆனால் இந்த அருவிக்கு 10 ஆண்டுகளுக்கு மின் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர் கோரிக்கையின் பின் இந்த அருவியை பார்க்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. முன்பதிவு செய்து இந்த அருவியை சுற்றிப் பார்க்கலாம்.
நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 12ஆம் தேதி நெல்லையில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி வருகிற 11ஆம் தேதி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்திலும், 14ஆம் தேதி வள்ளியூர் தெற்கு கள்ளி குளத்தில் உள்ள டிடிஎம்என்எஸ் கலைக்கல்லூரியிலும் காலை 9 மணி முதல் மாலை 3:30 மணிவரை நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.09) கனமழை பதிவாக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 6 தினங்கள் கடந்த நிலையில் உண்மை குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த நிலையில் அவர் இறந்தபோது மாயமான அவரது 2 செல்போன் இருப்பிடத்தை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தொழில் நுட்ப ரீதியான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் கிடைத்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. நேற்று பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை மூலக்கரைப்பட்டி சிவந்திபட்டி, சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் சேர்ந்தவர் தசரத மகாராஜா ராஜபாளையத்தில் உள்ள தனியார் இ பைக் நிறுவனத்தில் கடந்த 2021ஆண்டு பைக் வாங்கி அதில் பல முறை பழுது ஏற்பட்டதன் காரணமாக நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நேற்று வழக்கு விசாரித்த ஆணைய தலைவர் பாதிக்கப்பட்டவருக்கு 25 ஆயிரம் மற்றும் பைக்கை பெற்றுக் கொண்டு அதற்கான பணத்தை திருப்பிகொடுக்க பைக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேற்று குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.