Tirunelveli

News July 16, 2024

எடப்பாடியை சந்தித்த நெல்லை அதிமுகவினர்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி, நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (ஜூலை.16) சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, இசக்கி சுப்பையா, நெல்லைத் தொகுதியில் போட்டியிட்ட மகளிர் அணி ஜான்சி ராணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News July 16, 2024

நெல்லை பெண்ணுக்கு முதல்வர் பரிசு

image

சென்னை தலைமைச் செயலகத்தில், கைவினை பொருட்கள் தயாரிப்பில் சிறந்து பணியாற்றிய பெண்களுக்கு ‘பூம்புகார் மாநில விருதுகளை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். அதன்படி இன்று நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் தெற்கு பாரதி நகரில் வசித்து வரும் சுலைகாள் பீவிக்கு பூம்புகார் மாநில விருது முதல்வரால் வழங்கப்பட்டது.

News July 16, 2024

நெல்லை அருகே பெண் யானை பலி

image

அம்பை அருகே முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து, துணை இயக்குநர் இளையராஜா தலைமையிலான குழுவினர் சேர்வலாறு நீர் வரும் பாதையில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது உயரமான(சுமார் 100 அடி) இடத்தில் இருந்து விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு யானை இறந்தது தெரிய வந்தது. இறந்த 6 வயதுடைய பெண் யானையின் சடலம் அப்பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

News July 16, 2024

கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று (ஜூலை 16) அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.3000-ஆக உயர்த்த வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை ரூ.5000-ஆக உயர்த்த வேண்டும், வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

News July 16, 2024

ஊத்து பகுதியில் 98 மி.மீ மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஊத்து பகுதியில் 98 மில்லி மீட்டர் மழை, நாலுமூக்கு பகுதியில் 88 மில்லி மீட்டர் மழை, காக்காச்சி பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை, மாஞ்சோலை பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News July 16, 2024

பாளையங்கோட்டை எம்.எல்.ஏ ஆய்வு

image

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், இன்று (ஜூலை 16) காலை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்தார். இதில், அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

1 ரூபாய் கூட வாங்கவில்லை: அப்பாவு

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முதுமத்தான் மொழி பகுதியில், நேற்று காலை தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்தத் திட்டத்திற்காக எந்தவொரு ஆசிரியரிடமிருந்தும் ரூ.1 கூட வாங்கவில்லை. ஏற்கனவே இருக்கும் சத்துணவு கூடம் மற்றும் சமையல் அறையில் தான் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

News July 16, 2024

நல்லாசிரியர் விருது: சிஇஓ முக்கிய அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை எமிஸ் (EMIS) இணையதளம் மூலம் வருகிற 24ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதற்கான அறிவுரைகளை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த வருகிறது. இதனால், லேசானது முதல் மிதமான மழை பெய்யவும், பலத்த காற்று வீசவும் கூடும். எனவே, பொதுமக்கள் விளம்பர பேனர்கள், மரக்கிளைகள், மின்கம்பங்கள் அருகில் நிற்கும்போதும் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!