India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமானதால், நேற்று முன்தினம் மதியம் முதல் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில், இன்று (ஜூலை 17) நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜூலை மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 19ஆம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இதில், விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை மனுக்களாகத் தெரிவிக்கலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இருந்து நாளை (ஜூலை 18) மற்றும் 25 ஆகிய தேதிகளில், நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் இரவு 9 மணிக்கு ஷாலிமார் சென்றடையும். அதேபோல, ஷாலிமாரில் இருந்து வருகிற 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நெல்லை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்புவோர், இன்று (ஜூலை 17) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <

நெல்லையில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சம் தொட்ட வண்ணம் உள்ளது. உழவர் சந்தைகளில், 1 கிலோ 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தைகளில் 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூரில் தக்காளி வரத்து குறைந்துள்ளதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீரை தமிழகத்திற்கு 12-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், நெல்லை மாவட்டம், அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெறும் கையோடு விரட்டி அடிப்பது அநீதியாகும். குத்தகை காலம் முடிவடைந்தாலும் கூட தேயிலை தோட்டத்திற்கான கட்டமைப்புகள் அப்படியே இருப்பதால் அதனை அரசே ஏற்று நடத்தலாம். இதனால் மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறை திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் சார்பில் பள்ளி மாணவ ,மாணவிகள் அரசின் உதவித் தொகை பெற வசதியாக அஞ்சல்துறை சேமிப்பு கணக்குகள் துவங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று பாளையில் ஜான்ஸ் மற்றும் கதீட்ரல் பள்ளிகளில் நடந்தது. மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.

நெல்லை பேட்டை, அம்பை, ராதாபுரம் ஆகிய ஐடிஐ மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8903709298, 9486251843, 9499055790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.