Tirunelveli

News May 11, 2024

நெல்லை காங். தலைவர் கொலை: சிறப்பு குழு சந்தேகம்

image

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 29.3.2012இல் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்பொழுது மர்மமான முறையில் உயிரிழந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கும் ராமஜெயம் கொலை வழக்கும் ஒரே மாதிரி உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் அடைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 11, 2024

கல்லூரிக் கனவு கையேடு: வெளியிட்ட ஆட்சியர்

image

கல்லூரி கனவு என்ற சிறப்பு கருத்தரங்கு பாளை நேருஜி கலையரங்கில் வைத்து இன்று (மே 11) நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு கையேட்டினை வெளியிட மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நாள் முதல்வன் திட்டம் குறித்து சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

News May 11, 2024

கோடை மழை: இதை மட்டும் செய்யாதீங்க!

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது இடி மின்னலுடன் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மின்னலுடன் மழை பெய்யும்போது பொதுமக்கள் மின்பாதைகள், டிரான்ஸ்பார்மர், மின் சாதனம் உள்ள இடங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News May 11, 2024

நெல்லை மாவட்டத்தில் 3 மில்லி மீட்டர் மழை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும் நேற்று சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அந்த வகையில் சேர்வலாறு அணையில் 2 மில்லி மீட்டரும், கண்ணடியின் அணைக்கட்டில் 1 மில்லி மீட்டரும் மொத்தமாக மாவட்டத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 11) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

மாணவர்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க!

image

நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி கனவு என்ற சிறப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு பாளை நேரு சிறுவர் கலை அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைக்க உள்ளார். போலீஸ் கமிஷனர் மூர்த்தி புத்தகத்தை வெளியிடுகிறார் உயர் கல்வி பயில விரும்பும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். சிறப்பு கண்காட்சியும் நடைபெறுகிறது.

News May 11, 2024

உதவி பேராசிரியர் தேர்வு: விண்ணப்ப தேதி நீடிப்பு

image

உதவி பேராசிரியர் பணிக்கான டி.என்.செட் தேர்வு ஜூன் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 என நெல்லை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த தேதியை தற்போது மே 15ஆம் தேதி மாலை 5 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழகச் பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

5 வருடங்களாக சாதனை படைத்த பள்ளி சரிவு

image

12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பாளை மகாராஜநகர் ஜெயேந்திர சில்வர் ஜீப்ளி பள்ளி மாணவர்கள் கடந்த 5 வருடங்களாக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வந்தனர். ஆனால் இந்த வருடம் 12 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெறாததால் இந்த சாதனையை தக்க வைக்க முடியவில்லை. இந்தப் பள்ளியின் சாதனை கை நழுவிப்போனது.

News May 11, 2024

நெல்லை: 3000 பேர் ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க ஏற்பாடு

image

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றும் (மே 11), நாளையும் (மே 12) நடக்கும் மூன்று போட்டியில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்ச் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் பார்வையிட சிறப்பு ரசிகர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டியை காண வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம் என பிசிசிஐ பிரதிநிதி இர்பான் தெரிவித்தார்.

News May 11, 2024

விபத்து குறித்து நெல்லை முபாரக் அறிக்கை

image

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகளின் முறையான தொடர் ஆய்வு நடவடிக்கையால் மட்டுமே இவ்வாறு நடைபெறும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

நெல்லையில் புகார் அளிக்கும் தேசிய செயலாளர்

image

நெல்லை தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் பெர்டின் ராயன் மீது கொலை வெறி தாக்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரை இன்று (மே 11) மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் ஹென்றி திபேன் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளார். இதில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!