Tirunelveli

News May 13, 2024

நெல்லை மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

ஜெயக்குமார் கொல்லப்படுவதற்கு முன் சித்திரவதை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 தினங்கள் கடந்துவிட்டன. போலீஸ் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் வெளியாகின்றன. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் 4 மணி நேரமாவது சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என உடற்கூறு ஆய்வு முடிவுகளின்படி சந்தேகிக்கப்படுகிறது. அவர் உடலில் கடப்பாக்கல் மற்றும் முள் கம்பிகள் வைத்து முழுமையாக கட்டப்பட்டிருந்தது.

News May 13, 2024

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

image

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அரசு சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் பாளை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில் வைத்து இன்று(மே 13) நடைபெற்றது. நெல்லை மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி கலந்துகொண்டு முகாமினை  துவக்கி வைத்தார். மிலிட்டரி லைன் பள்ளிவாசல் தலைவர் செய்யது அப்பாஸ், செயலாளர் பசுல் ரகுமான், உதவி தலைவர் கமாலுதீன் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

நெல்லை: மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

நெல்லை கலெக்டர் ஆபிசில் தீ வைத்து கொண்ட நபர்

image

திருநெல்வேலி மாவட்டம் மருதபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பு என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் முன்பு இன்று (மே 13) மண்ணெண்ணெய் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார். சொத்து பிரச்சனை காரணமாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தீ வைத்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News May 13, 2024

‘காங். தலைவர் டார்ச் லைட் வாங்கியது உண்மை’

image

நெல்லை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட டார்ச் லைட் திசையன்விளை கடையில் வாங்கியதுதான் என்பதை அந்த கடைக்கு சென்று தனிப்படை போலீசார் உறுதி செய்துள்ளனர். எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் நேர்மையான முறையில் வெளிப்படையான, சுதந்திரமான முறையில் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ்பி சிலம்பரசன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News May 13, 2024

நெல்லை மாவட்டத்தில் இங்குதான் மழைப்பொழிவு அதிகம்

image

நெல்லை மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சியால் நேற்று மணிமுத்தாறு, நாங்குநேரி பாபநாசம், சேர்வலாறு, களக்காடு, காக்காச்சி, நாலு மூக்கு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நாலு முத்து பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

பி எஸ் 4 இன்ஜின் வெற்றி: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

image

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அதிநவீன சேர்க்கை உற்பத்தி திறன் கொண்ட 3d தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிஎஸ் 4 இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை நேற்று நடைபெற்றது. 665 வினாடிகள் வரை விஞ்ஞானிகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ராக்கெட்டை செலுத்துவதற்கான உந்து விசைத்திறன் கவுண்டவுன் தொடங்கி வெற்றி பெற்றது.

News May 13, 2024

நெல்லை காங். தலைவர் கூலிப்படையால் கொலை?

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சில நாள்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இது வரையிலும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கூலிப் படையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது போலீசார் விசாரணையை தொடர்கின்றனர்.

News May 13, 2024

பராமரிப்பு பணி: அணுமின் உற்பத்தி நிறுத்தம்

image

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (மே 13) காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 562 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் 60 நாட்களுக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!