Tirunelveli

News May 14, 2024

திசை மாறும் காங்கிரஸ் தலைவர் வழக்கு

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும், விசாரணை திசை மாறி இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

News May 14, 2024

+1 RESULT: நெல்லையில் 93.32% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்கள் 89.80% பேரும், மாணவியர் 96.29% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 93.32% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 11வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

ராமஜெயம்-ஜெயக்குமார் வழக்கு ஒன்றல்ல: ஐஜி தகவல்

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காங்கிரஸ் நிர்வாகி மர்மமான உயிரிழந்த நிலையில் நேற்று திருநெல்வேலியில் ஐஜி கண்ணன் ராமஜெயம் கொலை வழக்கையும் கேபிகே ஜெயக்குமார் சந்தேகம் மரணமும் ஒன்றாக கருத முடியாது. ராமஜெயம் வழக்கினை எடுத்த மாத்திரத்திலேயே கொலை என அறியப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் மரணத்தை அவ்வாறு கூற முடியாது என தெரிவித்தார்.

News May 14, 2024

நெல்லை: மின்னல் தாக்கி மூதாட்டி பலி

image

முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆண்டாள் (60) என்பவர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மழை பெய்ததால் சாலையோரத்தில் மரத்தடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மூதாட்டி ஆண்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 14, 2024

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 346 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழா நேற்று (மே 13) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டல முதுநிலை மேலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார்.

News May 13, 2024

கோடை மழை மின்வாரியம் அறிவுறுத்தல்

image

நெல்லை மாவட்டத்தில் கோடை மழை பெய்வதால் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை மழை இடி மின்னலுடன் பெய்யும் போது வீட்டில் மிக்ஸி, கிரைண்டர்,கணினி, செல்போன் போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மின் கம்பங்கள், மின் பெட்டிகள், மின் மாற்றிகள் ஆகியவற்றை தொட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு இன்று பாளை மண்டல மேற்பார்வை மின் பொறியாளர் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

News May 13, 2024

நெல்லை கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மே 13) தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்காக 3,69,545 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

News May 13, 2024

முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு

image

மத்திய அரசால் திருத்தம் செய்த முப்பெரும் சட்டங்கள் குறித்த 5 நாட்கள் பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆயுதப் படை அலுவலகத்தில் வைத்து தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார் துணை காவல் கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் ஜெயராஜ் மீனாட்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

News May 13, 2024

பள்ளி மாணவிகளை பாராட்டிய கல்வி அமைச்சர்

image

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த10ம் வகுப்பு மாணவி சஞ்சனாஅனுஷ் , 2ம் இடம் சுபகாயத்திரி , பாக்கிய லெட்சுமி, 3ம் இடம் ரஷிகா மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த பஜாஸ்லின் பிரீத்தி ஆகிய மாணவிகளை இன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பாராட்டினார். அப்போது பள்ளியின் தாளாளர் கிரகம்பெல் உடன் இருந்தார்.

News May 13, 2024

மணமக்களை வாழ்த்திய முன்னாள் அமைச்சர்

image

புளியம்பட்டி பகுதி அதிமுக அவை தலைவர் அண்ணாதுரை – கிளேராஎலிசபெத் இல்ல திருமண விழா பாளை முருகன் குறிச்சியில் உள்ள மதுரம் மினி ஹாலில் வைத்து இன்று நடைபெற்றது. தமிழக முன்னாள் செய்தித்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி எம்எல்ஏ-வுமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மோகன் கலந்து கொண்டார்.

error: Content is protected !!