India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும் 18 மற்றும் 19ம் தேதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று (மே 15) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் வருகிற 17, 18, 19 ஆகிய மூன்று தினங்களும் மாவட்டத்தில் பரவலாக கனமழையை எதிர்பார்க்கலாம் என அவர் கூறியுள்ளார். இதனிடையே அம்பை, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யத் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரசித்திபெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் வளைவு பகுதியில் சென்றபோது அங்குள்ள சுவரின் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை.
நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி இறப்பில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையைக் கையில் எடுத்தனர். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காததால் அடுத்த கட்ட விசாரணையாக இறப்பிற்கு முன் ஜெயக்குமாரின் செல்போனில் பேசியவர்களை விசாரிக்க போலீசார் இன்று (மே 15) முடிவு செய்தனர்.
நெல்லையில் திமுக துணைப் பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர் இன்று (மே 25) சந்தித்தார். திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக நெல்லைக்கு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் நேரில் சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆ.ராசாவுக்கு சால்வை அணிவித்தனர்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளை ஏமாற்றி இட்லி, வடைக்கு கட்டணம் வாங்கிவிட்டு பின்னர் வடை இல்லாமல் இட்லி விற்பனை செய்வதாக வியாபாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளை தடுக்க ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ரயில் பயணிகள், பொதுமக்கள் விரும்புகின்றனர்.
நெல்லை ரயில் நிலையத்தில் மூன்று நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை – புருலியா எக்ஸ்பிரஸ் பெட்டிகளை கொண்டு ஞாயிற்றுக்கிழமைதோறும் நெல்லையிலிருந்து தென்காசி, மதுரை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் என ரயில் பயணிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பிரதான அணைகளில் நீரும் அதிகரித்து வெளியேற்றப்படுகின்றது . அந்த வகையில் பாபநாசம் அணையில் இன்று (மே 15) காலை நிலவரப்படி 254.75 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணையில் 245 கன அடி தண்ணீரும் விவசாயத்திற்காக வெளியேற்றப்படுகின்றது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று நாங்குநேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, நம்பியாறு, காக்காச்சி, கொடுமுடியாறு, மூலக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (மே 15) காலை தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.