Tirunelveli

News May 16, 2024

மாஞ்சோலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த கோரிக்கை

image

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 700 குடும்பங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டின் குத்தகை காலம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மாஞ்சோலை எஸ்டேட் மக்களின் வாழ்வுக்காக அரசே இந்த தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News May 16, 2024

நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து விவரம்

image

நெல்லை மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர்வரத்து சுமாராகவே உள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று (மே 16) காலை 7 மணி நிலவரப்படி 42 கனஅடி நீர் வந்தது. 254 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த அணை நீர் இருப்பு 51 அடியாக சரிந்துள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 62 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 85 அடி. இந்த அணைக்கு 48 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

News May 16, 2024

ஒரே நாளில் 283 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (மே 15) பெய்த மழை அளவு விபரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட முழுவதும் ஒரே நாளில் 283 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப்பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ராதாபுரம் 35, மூலைக்கரைப்பட்டி 30, பாளையங்கோட்டை 30, மாஞ்சோலை 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நெல்லை 16 , நம்பியாறு 12, ஊத்து 10 மில்லி மீட்டர்.

News May 16, 2024

கேரளாவில் மழையா? அப்போ நெல்லையிலும் மழைதான்

image

கேரளாவில் வருகிற மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக இன்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் மழை தொடங்கினால் நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்வது வழக்கம். தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் நெல் கார் பருவ சாகுபடி பணியை மேற்கொள்வர்.

News May 16, 2024

நெல்லை: அரசுப் பள்ளியில் சேர கடும் போட்டி

image

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பில் மாணவிகள் அதிக மதிப்பெண்களை எடுத்து அபார சாதனை படைத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இங்கு மாணவிகள் சாதனை படைப்பதால் இங்கு சேர்வதற்கு மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக 11ஆம் வகுப்பு பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. விஐபிகள் பரிந்துரைக்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.

News May 16, 2024

ஜெயக்குமார் வழக்கு: டிஜிபி, ஐஜி நேரடியாக கண்காணிப்பு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் போலீசார் 11 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை நேற்று முதல் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தென் மண்டல ஐஜி கண்ணன் நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

News May 16, 2024

நெல்லை: இது அக்னி நட்சத்திரமா? மழைக்காலமா?

image

கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திர கத்திரி வெயில் தாக்கம் தொடங்கியது. அப்போது முதல் நாங்குநேரி வட்டாரம் உள்ளிட்ட நெல்லை மாவட்டம் முழுவதும் தினமும் 107 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இது முதல் 6 தினங்களே நீடித்தது. கடந்த 10-ம் தேதி முதல் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய தொடங்கியது. தற்போது இது கனமழையாக மழைக்காலம் போல் மாறிவிட்டது. வெப்பம் வெகுவாக தணிந்துள்ளது.

News May 16, 2024

மக்களே இன்று குடை எடுத்துச் செல்ல மறக்காதீங்க..!

image

கோடை மழை மற்றும் குமரிக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பிற்பகல் மாலை இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இன்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் குடை, விரைவில் கோட் உள்ளிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செல்வது நல்லதென தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

News May 16, 2024

நெல்லை: பெண்ணுக்கு கொலை மிரட்டல்… ஒருவர் கைது

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து தாராபுரம் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஸ்வரி (28). அதே ஊரை சேர்ந்த கணேசன் ( 38) என்பவர் கடந்த 13ஆம் தேதி அன்று மகேஸ்வரி வேலையை பார்க்கும் இடத்திற்கு வந்த கணேசன் பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கணேசனை கைது செய்தனர்.

News May 15, 2024

நெல்லை : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!