Tirunelveli

News May 17, 2024

நெல்லை: பாட நோட்டுகள் விலை 10-20% வரை சரிவு

image

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News May 16, 2024

கனமழை: அதிகாரிகளுக்கு கலெக்டர் முக்கிய உத்தரவு

image

அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது: மழை முன்னேற்பாடுகளை அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் செய்ய வேண்டும். நீர் தேங்கும் பகுதிகளில் அகற்றுவதற்கு வசதியாக தேவையான ஜேசிபி இயந்திரம் மின் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

News May 16, 2024

நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட முழுவதும் அடுத்து வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் இன்று (மே 16) முதல் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

News May 16, 2024

ஆட்சியரகத்தில் தீ குளித்தவர் பலி

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கடந்த 13ஆம் தேதி விவசாயி சங்கர சுப்பு தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி தனது உடலில் தீ வைத்து கொண்டார். இதில் 90% காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 16, 2024

புதிய தனிப்படை தோட்டத்தில் ஆய்வு

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இதுவரை பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகளை திறன்பட கைது செய்த அதிகாரிகளை ஒன்றிணைத்து ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை இன்று காலை முதல் ஜெயக்குமார் உடல் மீட்டெடுக்கப்பட்ட தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News May 16, 2024

நெல்லைக்கு ரெட் அலர்ட்!

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

பேருந்தில் ஆயுதம் பறிமுதல் வழக்கில் வாலிபர் வாக்குமூலம்

image

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு பேருந்தில் நேற்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் அமர்ந்திருந்த இருக்கையில் ஆயுதங்கள் இருந்து தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தனக்கு அங்கு ஆயுதங்கள் இருந்ததே தெரியாது என இன்று (மே 16) வாக்கு மூலம் அளித்துள்ளார்.

News May 16, 2024

மாஞ்சோலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த கோரிக்கை

image

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 700 குடும்பங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டின் குத்தகை காலம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மாஞ்சோலை எஸ்டேட் மக்களின் வாழ்வுக்காக அரசே இந்த தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News May 16, 2024

நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து விவரம்

image

நெல்லை மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர்வரத்து சுமாராகவே உள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று (மே 16) காலை 7 மணி நிலவரப்படி 42 கனஅடி நீர் வந்தது. 254 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த அணை நீர் இருப்பு 51 அடியாக சரிந்துள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 62 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 85 அடி. இந்த அணைக்கு 48 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

News May 16, 2024

ஒரே நாளில் 283 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (மே 15) பெய்த மழை அளவு விபரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட முழுவதும் ஒரே நாளில் 283 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப்பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ராதாபுரம் 35, மூலைக்கரைப்பட்டி 30, பாளையங்கோட்டை 30, மாஞ்சோலை 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நெல்லை 16 , நம்பியாறு 12, ஊத்து 10 மில்லி மீட்டர்.

error: Content is protected !!