India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பில் வருகிற மே 22 ஆம் தேதி அன்று தாமிரபரணி அவதார நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. தாமிரபரணி தாய்க்கு பல்வேறு அலங்கார பொருட்கள் சீர்வரிசையாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . தொடர்ந்து சிறப்பு தீப ஆரத்தி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மே 17) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மரத்தடி, பழைய கட்டிடங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவைகளில் நிற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் பாடப் பிரிவு மற்றும் வணிகவியல் மருந்தாக்கவியல் பாடப் பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு கடைசி நாள் வருகிற 22ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, 2 குழந்தைகள் உட்பட 4 பேர் கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்போது மருதகுளத்தைச் சேர்ந்த விவசாய சங்கரசுப்பு கடந்த திங்கட்கிழமை தீக்குளித்து இறந்தார். இது மாவட்டம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலில் அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இன்று (மே 17) கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் 143 அடிஉச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணை மற்றும் 156 அடி உச்சநீர் மட்டம் கொண்ட சேர்வலாறு ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 256 கன அடி நீர், 118 அடி உச்சநீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன் தினம் (மே 15) இரவு வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய மழை நீரை அரசு பஸ் ஒன்று சிக்கியது. இந்த நிலையில் தரைப்பாலம், சுரங்க பாலம், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தி உள்ளது.
“தொடர்ந்து கல்வி கற்போம்” திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, பள்ளி படிப்பை பாதியில் முடித்த மாணவர்கள் விவரம் நெல்லை மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் சுமார் 2000 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கல்வி கற்போம் திட்டத்தில் சேர்ந்து பயனடைய பாளை மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான சிறப்பு பயிற்சி அளித்து துணைத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (மே 16) இரவு கன மழை வெளுத்து வாங்கியது. இந்த
நிலையில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 9.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.