India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாநகர தாழையூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகித்த தி இந்தியா சிமெண்ட் நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா சிமெண்ட் நிறுவன எம்டி சீனிவாசன் சிமெண்ட் நிறுவனத்தின் பெரும் பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் வாங்கியதை அடுத்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். நெல்லையின் ஒரு அடையாளமாக இந்த சிமெண்ட் நிறுவனம் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை திருநெல்வேலி, தென்காசி, குமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(ஜூலை 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், டிப்ளமோ பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ரயில்வேயில் 7938 வேலை வாய்ப்புகள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆகும். இது குறித்து மேலும் தகவலுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையிலிருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சேவையை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து நேற்று(ஜூலை 28) தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில்ஆடிப்பூர முளைகட்டு திருவிழா இன்று (ஜூலை 29) அதிகாலையில் காந்திமதி அம்பாள் சன்னதி கொடிமரத்தில், கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் தாமிரபரணி நதியில் புனித நீராடிவிட்டு திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் 4 ஆம் நாளில் காந்திமதிஅம்பாளுக்கு, வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தி்ல் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சேவியர் தன்னாட்சி கல்வியியல் கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நவீன நாடகக் கலை 4 மாத சான்றிதழ் படிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் சேர்ந்து பயிலலாம். விருப்பமுள்ளவர்கள் www.sxcedn.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தி்ல் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொழிலாளர்களின் அடிப்படை தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்கான வசதிகளை செய்து தருவதாக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடப்பு கல்வி ஆண்டில் நெல்லை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வருகிற 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, பாடநூல், சைக்கிள், சீருடை, பஸ் பாஸ், வரைபடக் கருவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.