India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் நேற்று(மே 17) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அயன் திருவாலீஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற விவசாயி, வயல் பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஒரு காளை மாடு, ஒரு பசு மாடு மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (மே 18) காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 274.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 52.40 மி.மீ, நம்பியார் அணைப்பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்துக்கு இன்றும்(மே 18), நாளையும்(மே 19) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் கண்காணிப்பில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வானிலை சுழற்சியால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று(மே 18) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியானது. இதுவரை பாபநாசத்தில் 50 அடியும், மணிமுத்தாறு 85 அடி, சேர்வலாறு 62 அடி, பச்சையாறு மற்றும் கொடுமுடி ஆறு அணைகளில் 12 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. தொடரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நீர் வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் நேற்று (மே 17) வழக்கம்போல் வேலையை முடித்துவிச்சு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். மணிக்கூண்டு அருகே சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இசக்கிமுத்துவிற்கு கடந்த மாதம் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.
நேற்று குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், மேலும் 2 அருவிகளான பழைய அருவி மற்றும் பிரதான அருவிகளை தென்காசி வனத்துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் இன்று முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்றும் ( மே18) நாளையும் மிதமானது முதல் ‘கனமழை’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தால் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்பு மேலாண்மை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே மின்னொளி கபடி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் பண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இருபாலர் பங்கேற்கும் மின்னொளி கபடி போட்டியை நேற்று(மே 17) இரவு முன்னாள் எம்பி சௌந்தர்ராஜன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.2 லட்சமும், 2ம் பரிசு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று கரடி நடமாட்டம் இருப்பதாக இரவு ரோந்தில் இருந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக சென்று வரவும் எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளை கண்டால் காவல்துறைக்கோ, வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.