Tirunelveli

News March 22, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 22, 2024

திருநெல்வேலி: இரவில் போலீசார் வாகன சோதனை

image

மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் போலீசார் இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று (மார்ச் 21) நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி தேர்தல் விதிமீறல்கள் உள்ளனவா என சோதனை செய்தனர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

News March 21, 2024

நெல்லையில் பொது விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 25 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வு நடைபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

நெல்லை பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நெல்லை தொகுதி வேட்பாளராக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் இந்த தொகுதியில் போட்டியிடுவதால், காங்கிரஸ் vs பாஜக என களம் சூடுபிடித்துள்ளது.

News March 21, 2024

நெல்லை அல்லது நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் வருமா..?

image

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனும் போட்டியிடுவதற்காக தங்கள் கட்சியிடம் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு சீட் வழங்கபட்டு ஒருவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெற்றிப்பெற்றவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

News March 21, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மார்ச் 21) விடுத்துள்ள அறிவிப்பில், நெல்லை தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். உவரி, குலசேகரப்பட்டினம், பெரியதாழை ஆகிய இடங்களில் நாளை அதிகாலை கன மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

அதிமுக வேட்பாளர் எடப்பாடியிடம் வாழ்த்து

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார் என இன்று (மார்ச் 21) காலை அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 21, 2024

முதல்வர் தேர்தல் பிரச்சார இடம் அமைச்சர் ஆய்வு

image

நெல்லை, கன்னியாகுமரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 25ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நாங்குநேரி டோல்கேட் அருகில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (மார்ச் 20) மாலை ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News March 21, 2024

அன்பு சுவர் குறித்து ஆட்சியர் விளக்கம்

image

திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த அன்பு சுவர் நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அன்பு சுவர் நீக்கப்படவில்லை, மாறாக நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகின்றது .மேலும் சில இடங்களில் அன்பு சுவர் அமைக்கப்படும் பணி தேர்தலுக்குப் பின் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக, அண்மையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்பி தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார். நெல்லைக்கு அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!