India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்தையனார் கோயிலில் நடைபெறும் தூய்மை பணிகள் மற்றும் குடிசைகள் அமைக்கும் பணிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு நடத்தினார். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், மது பாட்டில்கள் கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் பாளை கேடிசி நகரில் இயங்கி வந்தது. மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் & அலுவலக ஆய்வு கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக இந்த அலுவலகத்தில் வசதிகள் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் திறக்கத் தயாராக உள்ளது.

நெல்லை வழியாக இயக்கப்படும் மும்பை ஜிஎஸ்டி – நாகர்கோவில் ரயில் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப் பாதையில் இயங்கும் என ஏற்கனவே தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த ரயில் இன்று(ஆக.1) வழக்கமான பாதையிலேயே இயக்கப்படும். இதுபோல் குமரி – புனே விரைவு ரயிலும் வழக்கமான பாதைகளில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடு படும் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் என்ற பெயரில் மாவட்டத்திற்கு ஒருவருக்கு விருது மற்றும் 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்து ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. திருநெல்வேலி ஹாக்கி யூனிட் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியானது நாளை மறுநாள் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் நெல்லை, கோவை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன என மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் சேவியர் சற்குணம் இன்று தெரிவித்துள்ளார்.

காரையார் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவிழா முன்னேற்பாடு மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் காரணமாக காரையார், அகஸ்தியர் அருவி பகுதிகளுக்கு அரசு பேருந்து, தனியார் வாகனங்கள் பாபநாசம் வன சோதனை சாவடியை கடந்து செல்ல இரண்டாவது நாளாக இன்று சார் ஆட்சியர் உத்தரவின்படி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜாவை கடந்த மே 20ஆம் தேதி பாளை நான்கு வழிச்சாலை அருகே ஓட்டல் முன்பு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் தொடர்புடைய நவீன், முருகன், பவித்தன், காசிராமன், முத்து இசக்கி, ஐயப்பன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆறு பேரையும் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து நேற்று(ஜூலை 31) மதுரை சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் இன்று விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், “ இரு சக்கர வாகனங்களில் பெண்கள் பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது, தங்களுடைய ஆடைகள் சேலை மற்றும் துப்பட்டாவை காற்றில் பறக்காதபடியும், வண்டியின் சக்கரத்தில் ஆடைகள் சிக்காதபடியும் கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் பெற்று 16ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராதாபுரம் எம்எல்ஏவும் சபாநாயகருமான அப்பாவு இன்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், “சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். சீனா லைட்டர்களுக்கு தடை விதித்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நடவடிக்கை வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.