Tirunelveli

News March 24, 2024

நெல்லை காங். வேட்பாளர் சஸ்பென்ஸ் நீடிப்பு

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் ஏழு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 23) இரவு அறிவிக்கப்பட்டது. இதில் அதில், நெல்லை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், நேற்று (மார்ச் 23) இரவு வரை கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். விடை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

News March 24, 2024

நெல்லை: முருங்கைகாய் விலை கடும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முருங்கைகாய் விலை உச்சம் பெற்றது. ஒரு கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்திலிருந்து இதன் விலை சரிய தொடங்கியது. வேகமாக சரிந்து வந்த முருங்கைகாய் விலை இன்று (மார்ச் 24) ஒரு கிலோ 25 ரூபாய்க்கு பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 

News March 23, 2024

நெல்லை அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி பயோடேட்டா

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக இன்று (மார்ச் 23) மாலை அறிவிக்கப்பட்ட ஜான்சி ராணி திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் நெல்லைப் புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும் உள்ளார். இவர் பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் திசையன்விளையில் வசிக்கிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 23, 2024

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

image

தச்சநல்லூர் மேக்கரையை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் மீது 5 கொலை வழக்கு, 12 கொலை முயற்சி உள்ளிட்ட 25 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட அவரை போலீசார் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் பிடித்து கைது செய்தனர். துணை போலீஸ் கமிஷனர் கீதா பரிந்துரையின்படி போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் படி மணிகண்டன் இன்று (மார்ச் 23) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News March 23, 2024

திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் மாற்றம்.!

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக சார்பில் ஜான்சிராணி போட்டியிடுவார் என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 23) தெரிவித்துள்ளார்.

News March 23, 2024

திருநெல்வேலி வீரருக்கு குவியும் பாராட்டு!

image

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 70வது சீனியர் நேஷனல் ஆண்கள் கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு மாநில அணியில், நெல்லை மாவட்டம் பணகுடியை சார்ந்த கபடி வீரர் ஹரிஹரன் தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து கபடி வீரர் ஹரிஹரனுக்கு நெல்லையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 23, 2024

திருநெல்வேலியில் ராபர்ட் புருஸ் போட்டியா?

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தெரியவந்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட கூடிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புருஸ் என்பவர் போட்டியிடுவதாக இன்று (மார்ச் 23) தகவல் வெளியாகி உள்ளது.

News March 23, 2024

வேட்பாளர் கனிமொழிக்கு முன்னாள் எம்எல்ஏ வாழ்த்து

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதைதொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் கனிமொழியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக நெல்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா இன்று (மார்ச் 23) நேரில் சென்று தனது வாழ்த்தை தெரிவித்தார்.

News March 23, 2024

நெல்லை அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணி குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

வாக்குப்பதிவுக்கு தயாராகும் மின்னணு இயந்திரங்கள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

error: Content is protected !!