India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 26 மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்கப்பட்டன. 27 மனைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு வாபஸ் தேதிக்கு பின் இறுதிப் போட்டியாளர்கள் விபரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு நடத்தப்படும், “TNSET 2024” தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று (மார்ச் 28) செய்தி வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகே உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தாளாளராக தற்போதைய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று (மார்ச் 28) தாளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ( மார்ச் 28 ) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பரிசீலனையில் ஈடுபட்டனர். ஒரு வழியாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது சொத்து மதிப்பினை குறிப்பிட்டு இருந்தார். அவர் 2006ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொழுது தனது பெயரில் நகைகள் இல்லை என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்பொழுது 240 பவுன் நகை உள்ளதாக கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு நெல்லையில் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து வேட்பு மனுவை திரும்ப பெற நினைக்கும் வேட்பாளர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் மீன்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த கணக்கெடுப்பு பணியின்போது பாபநாசம் பகுதியில் நீர் நாய்கள் காணப்பட்டது மகிழ்ச்சியான செய்தியாகும். இது போன்ற உயிரினங்கள்தான் தாமிரபரணியை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கின்றன என நெல்லையில் நேற்று (மார்ச் 27) மீன் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகராஜன் செய்தியாளர்களை இன்று (மார்ச் 28) சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தனது வேட்பு மனுவில் 2023இல் தன் மீது உள்ள வழக்கை மறைத்து மனு தாக்கல் செய்ததாகவும், இதனால் அவருடைய வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு மனு தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளதாக கூறினார்.
திருநெல்வேலி பாதிரியார் ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாதிரியார் காட்புரே நோபல் நெல்லை மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து இன்று (மார்ச் 28) தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இல்லை தமிழில் நெல்லை பார்லிமென்ட் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மார்ச் 27) பேசினார். அப்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியை இபிஎஸ் சிறப்பாக வழி நடத்துகிறார். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் ஜூன் 4-ஆம் தேதி 40 இடங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என கூறினார்.
Sorry, no posts matched your criteria.