Tirunelveli

News May 22, 2024

இன்று செயல்பாட்டுக்கு வந்த புதிய நடைமுறை

image

தமிழக மின்வாரியம் சார்பில் பொதுமக்கள் வரிசையில் நின்று மின் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக “க்யூ ஆர்” கோடு முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த நவீன முறை திருநெல்வேலி மாநகர் பழைய பேட்டை மின் பிரிவு அலுவலகத்தில் இன்று (மே 22) செயல்பாட்டுக்கு வந்தது. இதன் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறை குறித்து மின் கட்டணம் செலுத்த வந்த மின் நுகர்வோர்களுக்கு உதவி மின் பொறியாளர் அருணன் செயல் விளக்கம் அளித்தார்.

News May 22, 2024

விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

image

குன்னத்துரைச் சேர்ந்த விவசாயிகள் முருகன் (72), ஆறுமுகவேல் (54), ரவி (44) நெல்லை கடையில் நெல் விதையை வாங்கி பயன்படுத்தினர். அது நெட்டை, குட்டையாக வளர்ந்து மகசூல் தரவில்லை. அவர்கள் வக்கீல் பிரம்மா மூலம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மதுரை மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் எதிர்மனுதாரர் மேல் முறையீடு செய்தார். அதை தள்ளுபடி செய்ததுடன் விவசாயிகளுக்கு ரூ.2,05,000 வழங்க உத்தரவிட்டது.

News May 22, 2024

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்ச மழை எங்கு தெரியுமா?

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு அலர்ட் கனமழை பெய்யும் என அறிவித்ததை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்தது. இதனை அடுத்து அதிகபட்சமாக நாலு முக்கு பகுதியில் 39 மில்லிமீட்டர் மழை, ஊத்து பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை, காக்காச்சியில் 27 மில்லிமீட்டர் மழை, மாஞ்சோலையில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

News May 22, 2024

நெல்லை மாவட்டத்தில் 117.40 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (மே 22) காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 117.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 39 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 22, 2024

நெல்லையில் கொலை: 5 பேர் அதிரடி கைது

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு பட்டப் பகலில் மூன்றடைப்பு அருகே உள்ள வாய் குலத்தைச் சேர்ந்த தீபக் ராஜன் என்பவரை ஆறு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மே 21) இரவு ஆறு பேரில் 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

News May 22, 2024

அணைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது

image

நெல்லை மாவட்ட பகுதிகளில் நேற்று ஆரஞ்சு அலர்ட் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளான மணிமுத்தாறு அணை பகுதியில் 9.4 மில்லி மீட்டர் மழை, பாபநாசம் அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை ,சேர்வலாறு அணைப்பகுதியில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

News May 22, 2024

இன்று முதல் 3 நாள் குடை முக்கியம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெயில் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. நேற்று இரவிலும் பாளை வட்டாரத்தில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (மே 22) முதல் அடுத்து மூன்று தினங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோட்டுடன் செல்வது நல்லது.

News May 22, 2024

மாவட்ட செயலாளர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமையில் பாளை மகாராஜா  நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 22, 2024

வேன் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் காயம்

image

நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இராதாபுரம் அருகே நேற்று (மே 21) இரவு 20-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் காயமடைந்த 17 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 21, 2024

நெல்லை அருகே  சிறுத்தை சிக்கியது

image

பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் கிராமத்தில் சிறுத்தை ஆட்டை தூக்கி சென்ற நிலையில், அனவன்குடியிருப்பு பகுதியில் சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு அந்த கூண்டு ஒன்றில் சிறுத்தை சிக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!