India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைப்பு நடத்தும் மாநாடு அமெரிக்காவில் கென்னடக்கி மாநகரத்தில் நாளை 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் உலகத் தலைவர்கள், அமெரிக்க தலைவர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் பாளையை சேர்ந்த மகபூப் ஜான் தனது மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னையில் இன்று (ஆக.6) வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

10 வது தேசிய கைத்தறி நாள் விழா சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, நாளை (7.8.20 24) காலை 10.30 மணி அளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்ஷூக் மான்டவியாவை சந்தித்து பீடித் தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.800-ல் இருந்து ரூ-6000 ஆக உயர்த்தி வழங்குமாறு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று (ஆக.6) கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் இது குறித்து பரிசளிப்பதாக கூறினார்.

நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெல்லை மாவட்ட ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதுக்குட்பட்டவர்கள் 07.08.2024-க்குள் நெல்லை மாவட்ட ஆயுதப்படை காவல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடைநிலை கல்வி) கூவாச்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி பணியாளர்கள் தொகுதி இணை இயக்குனர் பிறப்பித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் சுதந்திர தின விழா ஆக.15 அன்று கொடாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அஞ்சல அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து தலைமை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின், திருநெல்வேலி மாநகர மாவட்ட கழக நிர்வாகிகளை நியமனம் செய்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட அவைத் தலைவராக பாலசுப்பிரமணியனும், மாவட்ட இணை செயலாளராக வெங்கடேஸ்வரியும், துணைச் செயலாளராக கணபதி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள SBI வங்கி கிளையில், ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என ஸ்ரீ சலபதி ராவ் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அன்றிலிருந்து தலைமறைவாக இருந்த சலபதிராவை, CBI போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை சுத்தமல்லி பகுதி வீட்டில் சலபதிராவ் வாடகைக்கு தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, இன்று(ஆக.,6) அவரை CBI அதிகாரிகள் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஆக.,6) அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பொலிரோ வாகனத்தில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, வாகனத்தில் வந்த சிவகாசியை சார்ந்த சீமைசாமி, கோபாலகிருஷ்ணன் & சங்கரன்கோவிலை சேர்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து மூன்றடைப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.