Tirunelveli

News April 11, 2024

ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம் மக்கள் உற்சாகம்

image

நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் இன்று (ஏப்.11) ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகையும் நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டதையும் காண முடிந்தது.

News April 11, 2024

திமுகவினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதில்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீட்டில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாருக்கு திருநெல்வேலி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் நேற்று (ஏப்.10) பதில் அளித்துள்ளார். அதில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

மோடி நெல்லை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையிலான காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

News April 11, 2024

நெல்லை: தேவர் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை

image

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை செலுத்தினார். நெல்லை பாராளுமன்ற தேர்தலில் காங். வேட்பாளர் ஆதரித்து ரூபி மனோகரன் எம்எல்ஏ களக்காடு பகுதியில் நேற்று (ஏப். 10) இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வடுகச்சிமதில் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் படத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார். அதில் அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 10, 2024

நாளை ரம்ஜான் தொழுகை நடைபெறும் இடம்

image

நாளை 11.4.2024 வியாழக்கிழமை காலை 7.15 மணி அளவில் மேலப்பாளையம் பஜார் திடலில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை IPP சார்பில் பெருநாள் தொழுகை நடைபெறும்
பெண்களுக்கு தனியிட வசதி உண்டு என இஸ்லாமிய பிரச்சார பேரவையினர் அறிவித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகைக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணி இன்று (ஏப்ரல் 10 ) இரவு நடைபெற்றது.

News April 10, 2024

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை நெல்லை வருகை

image

விளையாட்டுதுறை
அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 6 மணியளவில் நெல்லை சந்தை ரவுண்டானாவில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் ராபர்ட்புரூஸ் -க்கு “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தர உள்ளார். கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் இன்று (ஏப்.,10) அழைப்பு விடுத்துள்ளார்.

News April 10, 2024

நெல்லையில் இருந்து சிறப்பு பேருந்து

image

திருவண்ணாமலையில் ஏப்ரல் 23ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் இன்று (ஏப்.10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 10, 2024

தேர்தல் பணிகளை ஆய்வு செய்த மாநகர செயலாளர்

image

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பேட்டை பகுதி 25வது வார்டில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி ஆகியோர் இன்று (ஏப்.10) 25வது வார்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் பொழுது நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 10, 2024

நெல்லையில் ட்ரோன் பறக்க தடை விதித்த ஆணையாளர்

image

நெல்லையில் வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக நெல்லை மாநகர் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று (ஏப்.10) உத்தரவிட்டுள்ளார்.

News April 10, 2024

நெல்லை முபாரக் இரங்கல்

image

நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் மகன் டாக்டர் ரவீந்திரன் மற்றும் மருமகள் டாக்டர் ரமணி ஆகியோர் நேற்று (ஏப்.9) கயத்தாறு அருகே நடந்த வாகன விபத்தில் மரணம் அடைந்தனர். இவர்களின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!