Tirunelveli

News May 25, 2024

இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் – டிஐஜி நடவடிக்கை

image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் விஜயகுமார். இவர் நெல்லை மாவட்டம் பாளை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது டாக்டர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து இன்று திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவிட்டார்.

News May 25, 2024

நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (25.5.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 25, 2024

ஜெயக்குமார் உறவினர்கள் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருகை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது வழக்கு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலகராணி தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (மே 25) ஜெயக்குமார் உறவினர்கள் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

News May 25, 2024

ஆயுதம் ஏந்திய காவலர் ரோந்து பணி: எஸ்பி உத்தரவு

image

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு தீபக்ராஜா படுகொலையில் அவருடைய உடல் அரசு மருத்துவமனையில் உள்ளது. தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் பெறும் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் இருசக்கர வாகனத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து பணியும் மேற்கொள்ள நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (மே25) உத்தரவிட்டார்.

News May 25, 2024

காவல்துறை-போக்குவரத்து துறை மோதல்: சபாநாயகர் தகவல்

image

பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என இன்று (மே 25) தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

நெல்லையில் 7 செ.மீ மழைப்பதிவு!

image

திருநெல்வேலியில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் 7 செ.மீ, கக்காச்சி பகுதியில் 5 செ.மீட்டரும் கொடுமுடியாறு அணை பகுதியில் 4 செ.மீ, அம்பாசமுத்திரம், சேர்வார் அணை, மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆகிய பகுதிகளில் 3 செ.மீ, நம்பியார் அணை, கன்னடியன் அணைக்கட்டு, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 25, 2024

நெல்லை: 13 பேருக்கு ரூ.1.04 கோடி மானியம்

image

பட்டியலினத்தவர் பழங்குடியினர் தொழில் முனைவராக உருவாக்கவும் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் சமுதாய மக்கள் ஒருங்கிணைத்து முன்னேற்ற பாதையில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 பேருக்கு ஒரு கோடியே 4 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

News May 25, 2024

தீபக் ராஜா படுகொலை: முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு, வாகைகுளத்தை சேர்ந்த தீபக் ராஜா என்பவர் மே 20ஆம் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் பெறும் வரை பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு, எஸ்பி சிலம்பரசன் உத்தரவுபடி முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News May 25, 2024

நெல்லை: சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் வழியாக இயங்கும் 06029/06030 மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News May 24, 2024

இரண்டு நாள் குடிநீர் “கட்” ஆகும் வார்டுகள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகம் தாக்கரே ஞான தேவராவ் இன்று (மே 24) விடுத்துள்ள அறிக்கை: சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து மகிழ்ச்சி நகர் தரை தள நீர் தொட்டிக்கு வரும் பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் மே 28, 29 ஆம் தேதிகளில் மேலப்பாளையம் மண்டலம் 40, 41, 42, மற்றும் 51 முதல் 55 வரையிலான வார்டு பகுதியில் குறைந்த அளவை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!