India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் மழை குறைந்ததை முன்னிட்டு வெயில் வெளுத்து வாங்க துவங்கியுள்ளது. அந்த வகையில் இன்று (மே 27) காலை முதல் வெயில் வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நாளை (மே 28) அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த வாரம் வெட்டி கொலை செய்யப்பட்ட தீபக்ராஜாவின் உடல் இன்று (மே 27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பொன்னாக்குடி பாலத்தின் மீது நெல்லையில் இருந்து இன்று (மே 27) நாகர்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கபிலேஸ்வரன் (22) ஆகிய இருவரும் 4 வழிச்சாலையில் உள்ள பாலத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூலம் கடிதத்தில் கூறிய அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் இன்று தெரிவித்தனர்.
திருநெல்வேலி மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பாளை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் வாக்கு எண்ணுவதற்கு 7 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி இன்று (மே 27) ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திக் திக் மனநிலையில் உள்ளனர்.
கடையம் அருகே மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயம் 131வது பிரதிஷ்டை விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நேற்று சிறப்பு விருந்தினராக திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ், மாயவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்த 5 தினங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூரில் அகில இந்திய அனைத்து பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ரஷ்மி ரூமி தலைமையில், நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற, அமெரிக்க அரசின் டிப்ளமேட்டிக் ஹோல்டர் மற்றும் முன்னாள் இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் (ICC) நீதிபதி டாக்டர் மது.கிருஷ்ணன், நெல்லை பாடகர் செய்யது அலாவுதீனுக்கு சிறந்த இளம் பாடகர் விருது வழங்கி பாராட்டினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர் கல்வி பயின்ற இளைஞர்கள் வெளிநாடு வேலைக்கு செல்லும்போது விசா, பணி விவரங்களை உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளலாம். சென்னை குடிபெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90 42 14 92 22, என்ற எண்ணில் 24 மணி நேரமும் அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
தென்காசி வழியாக இயக்கப்படும் நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதன்படி ஜூன் 2, 9, 16, 23 30 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து புறப்படும் இதுபோல் மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு ஜூன் 3 , 10, 17, 24, 31 ஆகிய தினங்களில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன்பதிவு நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.