India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாங்குநேரி பட்டபிள்ளை வடக்கு தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று (ஏப்ரல் 14) மதியம் வீட்டில் கம்பரசர் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து கீழே விழுந்தார். உடனே சிறுவனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து 17வது வார்டுக்குட்பட்ட பழைய பேட்டை, சர்தார்புரம், காந்தி நகரில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி தலைமையில் வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த் மற்றும் திமுக மகளிர் அணியினர் நேற்று (ஏப்ரல் 14) இரவு வீடு வீடாகச் சென்று கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளது. தாம்பரம் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றபட்ட விவகாரம் குறித்து விசாரிக்க இன்று (ஏப்.14) சம்மன் அனுப்பிய காவல் துறையால் நெல்லை பார்லிமென்ட் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதனால் திமுக, காங் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) நெல்லை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் நாளை (ஏப்ரல் 15) சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சகஸ்ர லிங்கம் சன்னதி முன் மாலை 5 மணிக்கு இந்த வழிபாடு நிகழ்ச்சி பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு சார்பில் நடைபெறுகிறது. சிவ பக்தர்கள் திரளாக பங்கேற்க திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான கூத்தங்குழி உவரி, கூட்டபனை , பெருமணல், பஞ்சல், கூடங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாளை முதல் 61 நாட்களுக்கு ( ஏப். 15 ) கடலுக்கு செல்ல மாட்டார்கள். எனவே மீன்களின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
நெல்லையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (ஏப்.14) காலை வரை மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.14) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்றும் தொடர்ந்து வானிலை மந்தகமாக காணப்படுவதால் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெஇந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் நரிக்குறவர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இனிப்பு வழங்கி வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
நெல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.