India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணி நிறைவு பெற்ற தமிழக உளவுத்துறை ஐஜி கண்ணப்பன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (மே 31) நெல்லைக்கு வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்தனர். பின்னர் ஐஜி கண்ணப்பன் உடன் பல்வேறு ஆலோசனைகளை பத்திரிகையாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிகழ்வின்போது மாநகர பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் பணி மற்றும் பாதுகாப்பு பணி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் இன்று (மே 31) நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகர காவல் துணை ஆணையாளர் ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் உடன் இருந்தனர்.
நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பு: ஜனவரி 1 முதல் இன்று (மே 31) வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் மாஞ்சோலையை அடுத்த நாலுமுக்கு பகுதியில் 1170 மிமீ மழை பதிவாகியுள்ளது. பிற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பதிவான மழை அளவுகள்: ஊத்து (நெல்லை) 982 மி.மீ, காக்காச்சி (நெல்லை) 902 மி.மீ, மாஞ்சோலை (நெல்லை) 793 மி.மீ பதிவாகியுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் பதிவிக்கான செட் தகுதி தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வு வருகிற ஜூன் 7 மற்றும் 8ம் தேதி நடக்கிறது. தேர்வு மையம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பல்கலைக்கழகம் சார்பில் நேற்று(மே 30) தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது, கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப பதிவு தமிழ்நாடு அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பிக்மி 3.0 எனும் புதிய இணையதளம் மூலம் தாங்களாகவே பதிவு செய்யலாம். இந்த புதிய இணையதளத்தில் ஒவ்வொரு கற்பணியும் செவிலியர் இல்லாமலே கர்ப்ப பதிவை picme3.tn.
gov.in என்னும் இணையதளம் மூலம் பதிவு செய்து RCH – ID பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
மக்களைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூடபட்டிருக்கும் என நேற்று(மே 30) மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(மே30) இரவு 12 மணி முதல் 36 மணி நேரம் மும்பையில் நடைமேடைகளை சீரமைக்கும் பணி நடப்பதால் தாதர்-மும்பை இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தானே ரயில்நிலைய நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் நேற்று(மே 30) இரவு 12 மணி முதல் ஞாயிறு(ஜூன் 2) இரவு வரை ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நெல்லை மக்கள் அதற்கு ஏற்ப பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நாளை (மே 31) நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவர் நெல்லையில் கலைஞர் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதற்கான பணிகளை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் புதிய கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 10ஆம் தேதி முதல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் மைதிலி அறிவித்துள்ளார். தொடர்ந்து 14 ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது: மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.