India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் மக்களவை பொதுத்தேர்தல் இன்று (ஏப்.19) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பின்னர் அங்கு நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவை பொதுத்தேர்தல் இன்று (ஏப்.19) நடைபெறுகின்றது. இந்த தேர்தலை முன்னிட்டு மேலப்பாளையம் கணேசபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான நெல்லை முபாரக் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இந்த நிகழ்வின்போது அவருடன் எஸ்டிபிஐ கட்சியினரும் கலந்துகொண்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒய்.எம்.சி.ஏ ஹோமில் இன்று (ஏப். 19) காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு தனது குடும்பத்தினருடன் ராதாபுரம் லெப்பை குடியிருப்பு அருகே உள்ள பெரிய நாயகிபுரம் ADH அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு இன்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. களத்தில் மொத்தம் 23 வேட்பாளர்கள் உள்ளனர். ஆயினும் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் பிரதான வேட்பாளராக கருதப்படுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் பலர் இறுதி நாட்களில் தங்களால் முடிந்த பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
திருநெல்வேலி மக்களவைத் பொதுத் தேர்தல் நாளை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் நாளை பகல் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை மற்றும் மதிய நேர காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என திரையரங்குகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முருகன் என்பவரிடம் நேற்று
(ஏப். 17) இரவு 8 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த ரூ. 33 லட்சத்தை பறித்து சென்றனர். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் மீது நாங்குநேரி போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி திருநெல்வேலி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் நாளை (ஏப்.19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1810 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் நாளை தவறாது வாக்களித்திட தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் இன்று (ஏப்.18) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை பொதுத்தேர்தல் நாளை (ஏப்.19) நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்.18) திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஜனநாயக திருவிழா என்ற அழைப்பிதழ் நெல்லையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.