India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டத்தில் சசிகலா அதிமுக தொண்டர்களை நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அம்பை பகுதிக்கு வந்த சசிகலாவிற்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பேசுகையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்ய சொல்லி மின்சாரம், குடிநீர் போன்றவற்றை நிறுத்தி விட்டார்கள். அரசாங்கம் மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என பேசினார்.

நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கனமழை, சூறாவளி காற்று, இடி மின்னல் அதிகமாக இருந்தால் அவற்றிலிருந்து சமாளிக்க ஏதுவாக அனைத்து செயற்பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டி தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் லிமா எனும் இடத்தில் வருகிற 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் ஊரைச் சார்ந்த கனிஷ்டா டீனா 400×4 தொடர் ஓட்டத்தில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்க உள்ளார். இவர் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென ஊர் பொதுமக்கள் நேற்று பாராட்டினர்.

நெல்லை மாவட்டத்தில் 831 கிராமங்களுக்கு ரூ.605 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கவுள்ளது. இதனை முன்னிட்டு ஏர்வாடி விளக்கிலிருந்து லெவிஞ்சிபுரம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இந்த குழாய் பதிக்கும் பணியை நாளை சபாநாயகர் அப்பாவு வள்ளியூர் சந்திப்பு அருகில் தொடங்கி வைக்கிறார். எம்பி, எம்எல்ஏ கலந்து கொள்கின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள்(06668/06667) ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று(ஆக.17) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாலருவி ரயில் தூத்துக்குடியில் இருந்து கிளம்புவதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை-பாட்னா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(ஆக.,17) இரவு 9:45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு 3ஆவது நாள் காலை 5.45 மணிக்கு பாட்னாவிற்கு செல்ல உள்ளது. இந்த ரயிலில் ஒரு AC இரண்டடுக்கு பெட்டி, 2 AC மூன்றடுக்கு பெட்டிகள், 9 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அறிவிப்பு செய்துள்ளது.

நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(ஆக.,16) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநகர திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேலப்பத்தையில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாரையும், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பத்தாரையும் நெல்லை MP ராபர்ட் புருஸ் நேற்று(ஆக.,16) சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களது குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் கிடைக்க உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தாரிடம் உத்தரவிட்டார். முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் மானபங்கம் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட தனியார் மருத்துவமனைகள் நாளை ஆகஸ்ட் 17 காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் இயங்காது. அவசர மருத்துவ சேவை மட்டும் நடைபெறும் என இந்திய மருத்துவச் சங்க நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.