India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாளை கோர்ட் அருகில் உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம் அருகில் உள்ள 5 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நெல்லை போலீஸ் உதவி கமிஷனர் பரிந்துரையின்படி நாளை (ஆக 20ம் தேதி) ஒரு நாள் மட்டும் மூடப்பட வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (ஆக.19) மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் குலவணிகர்புரம் ரயில்வே கடவு எண் 4க்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு 14 புல எண்களின் நில உரிமையாளர்களிடமிருந்து 1552 சதுர மீட்டர் நிலங்களை ரூ.7.96 கோடி மதிப்பீட்டில் தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை நீதிமன்ற வாசலில் வெடிகுண்டு வீசப்பட்டதாக இன்று (ஆக.19) சமூக வலைதளங்களில் செய்தி பதிவிடப்பட்டது . இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானதாகும். அப்படி எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிட்டு அந்த நபரே அதனை நீக்கிவிட்டார் என்பதை நெல்லை மாநகர காவல் துறை உறுதிபடுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ஆம் தேதி பகல் 11 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக இரண்டாவது தள கூட்டரங்கில் நடைபெறும். இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். விவசாயிகள் கலந்து கொண்டு பலன் பெறலாம் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஆக.19) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் – செங்கோட்டை இடையே நெல்லை வழியாக இயக்கப்படும் அதிவிரைவு ரயில் இன்று (ஆக.19) இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இரவு 9 மணிக்கு புறப்பட இருந்த ரயில் 2.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் இந்த அறிவிப்பை ஏற்று அதன்படி பயணம் செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடந்தன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டன. தற்போது ரயில் நிலையத்தில் பணிகள் நிறைவு பெற்றதால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்று(ஆக.,19) முதல் சென்னை எழும்பூர் வரை வழக்கம்போல் செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த நபரை மீட்கும் பணி இன்று(ஆக.,19) காலை 6.30 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. மாவட்ட அலுவலரின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களில் இருந்தும் 50 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி துரிதமாக நடைபெறுகிறது. மாயமான வாலிபரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை ஏர்வாடி அருகேயுள்ள தளபதி சமுத்திரம், மேலூர் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பாபநாசம். மணிமுத்தாறு பட்டாலியன் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவரது மனைவி வள்ளியம்மாள். இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்துள்ளார். நேற்று(ஆக.,18) அதிகாலை வீடு புகுந்த மர்ம நபர், வள்ளியம்மாள் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளார். ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆக.18) மதியம் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய 24 வயதான பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மாலை 6.30 மணி ஆகியும் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மீட்பு பணிகள் நாளை காலை 6.30 மணிக்கு தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் நெல்லையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விஎஸ்ஆர். ஜெகதீஷ் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.