India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கோட்டையில் இருந்து நெல்லை சந்திப்புக்கு பயணிகள் ரயில் இன்று ஏப். 20 மாலை சென்று கொண்டிருந்தது. சேரன்மகாதேவி அருகே இரவு 7.15 மணியளவில் ரயில் சென்ற போது அங்குள்ள செங்கொடி சாஸ்தா கோவில் அருகே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் மூன்று எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலி .ஒரு மாடு கவலைக்கிடமாக உள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவுக்காக கடந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று (ஏப். 20) அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை, பாளை கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. ஓட்டு பதிவுக்கு குறைவாக வந்த வாக்காளர்கள் டாஸ்மாக் மதுபான கடைக்கு அதிக அளவில் வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்ரல் 20) விடுத்துள்ள அறிக்கை: மக்களவை தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் எனது தேர்தல் பரப்புரையில் துணை நின்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு அரங்கில் வைக்கப்பட்டன. இவற்றை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சோனாலி இன்று (ஏப்ரல் 20) நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மிக அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் இன்று (ஏப்.20) வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் கட்சி முகவர்கள் முன்னிலையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வாக்களிக்க வருகை தந்த மூதாட்டி ஒருவருக்கு மாநகர காவல் துறையினர் நீர், மோர் வழங்கி உபசரித்தனர். இந்த புகைப்படமானது இன்று (ஏப்.20) நெல்லையில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (ஏப்.21) திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (ஏப்.20) மாலை 10வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி பிரபலமும், சமூக ஆர்வலருமான கே.பி.ஒய்.பாலா நெல்லைக்கு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னதான கூடத்தில் அன்னதானத் திட்டத்திற்கு வருகை தரும் பயனாளிகள் வசதிக்காக நிழற்கூரையுடன் கூடிய வரிசை அமைப்பு மதுரை ஜேகே பின்னர் லிமிடெட் நிறுவனத்தினர் மூலம் உபயமாக இன்று (ஏப்.20) வழங்கப்பட்டது. இதில் திருக்கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் ஜே.கே.பென்னர் நிறுவன நிர்வாக மேலாளர் இக்னேஷியஸ் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.