India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் கோயிலின் தெப்பத்திருவிழா, இன்று இரவு நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெப்பத்திருவிழாவை ,
தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
வி.எஸ்.ஆர்
ஜெகதீஷ்,
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
சவுமியா ஜெகதீஷ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலதட்டப்பாறை சேர்ந்த சிவா ராணுவத்தில் பணியாற்றினார். இவர் கடந்த 2018-ல் சென்னையில் டூ தூத்துக்குடிக்கு ஆம்னி பேருந்தில் சென்ற போது விபத்தில் பலியானார். மனைவி ஸ்ரீபிரியா நஷ்ட ஈடு கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் சிவா குடும்பத்துக்கு 1 கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 224 ரூபாய் 7% வட்டியுடன் வழங்க பேருந்து காப்பீட்டு கழகத்துக்கு இன்று உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை, திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடமிருந்து ரூ.4 கோடி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் 28.51 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க சுயேச்சை வேட்பாளர் ராகவன் வழக்கு தொடுத்திருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்.22) அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் டாணா வாட்ச்மேன் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியன் (56). இவர் ஆம்பூர் மெயின் ரோட்டில் நேற்று (ஏப்.21) நடந்த சென்றபோது அவர் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சாலையோர குளிர்பான கடைகளில் தாகம் தணிப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மானூர் வட்டார பகுதிகளில் அதிகாலை விற்பனைக்கு கொண்டுவரப்படும் இளநீர் காலை 10 மணிக்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன . ஒரு இளநீர் 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவு இன்று மதியம் ஆரம்பமாகிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் மே மாதம் 18ம் தேதி வரை இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பஸ் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தேவையான இடங்களுக்கு சிறப்பு பஸ் ரயிலில் இயக்கப்படுகின்றன. இன்று (ஏப்ரல் 22) மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நாளை அதிகாலை 12.45 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது உண்டு.
இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளை ( ஏப்.22 ) திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலக தெருவில் உள்ள ரேடியன் ஐஏஎஸ் அகாடமியில் தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் வருகிற 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. 18 வயது நிரம்பிய ஆண் பெண்கள் பங்கேற்கலாம். சேர விரும்புபவர்கள் நேரில் வந்து தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.