Tirunelveli

News June 4, 2024

வாக்கு எண்ணிக்கை 13வது சுற்று முடிவின் நிலவரம்

image

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) அரசு பொறியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றின் முடிவில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 81861 வாக்குகள் முன்னிலை வகிக்கின்றார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2,04,893 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

நெல்லையில் 12வது சுற்றில் திமுக முன்னிலை

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 12வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 81,330 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங். – 2,71,251
பாஜக – 1,89,921
நாதக – 52,205
அதிமுக – 49,109
12ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 5,90,520

News June 4, 2024

நெல்லை தபால் வாக்கு முதல் சுற்று முடிவு வெளியானது

image

நெல்லை மக்களவைத் தொகுதி பதிவான வாக்குகள் இன்று அரசு பொறியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தபால் வாக்குகள் மொத்தம் 8580 பதிவாகி உள்ளன.
3 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
முதல் சுற்றில் 3 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
இதில் காங்கிரஸ் 913, பாஜக 600, அதிமுக 328, நாம் தமிழர் கட்சி 62 வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

News June 4, 2024

நெல்லையில் 900 வாக்குகளுக்கு மேலாக செல்லாத வாக்கு

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 4) காலை 8:00 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து விவரம் வெளியாகி உள்ளது. அதில் 900 வாக்குகளுக்கு மேலாக செல்லாத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 4, 2024

பதினோராவது சுற்று முன்னிலையில் திமுக

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 11வது சுற்றில் காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 76,598 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். காங், – 2,50,015, பாஜக – 1,73,417, நாதக – 48,395, அதிமுக – 44,786 11ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 5,42,597

News June 4, 2024

நெல்லை எம்எல்ஏ தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை

image

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். தற்போது ஒன்பது சுற்றி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் விட மிகவும் பின்தங்கி உள்ளார். வெற்றி பெறும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து அடுத்த 2 ஆண்டுக்கு எம்எல்ஏவாக தொடர்வார்.

News June 4, 2024

10வது சுற்றிலும் திமுக முன்னிலை

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 10வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 77,511 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங் – 2,29,638
பாஜக – 1,52,127
நாதக – 44,224
அதிமுக – 40,655
10ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 4,89,747

News June 4, 2024

9வது சுற்று: வியத்தகு முன்னேற்றம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 9வது சுற்று முடிவுகள் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
காங்கிரஸ் – 207195
பாஜக – 134919
அதிமுக – 36276
நாதக – 39707
வாக்கு வித்தியாசம்- 72276 ( காங்கிரஸ் முன்னிலை). காங்கிரஸ் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

News June 4, 2024

60021 வாக்கு வித்தியாசத்தில் இந்திய கூட்டணி

image

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரி நடைபெற்று வருகின்றது. இதில் எட்டாவது சுற்று முடிவில் 60021 வாக்குகள் பெற்று இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். இதன் காரணமாக திருநெல்வேலியில் இந்திய கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

News June 4, 2024

எம்பி போனாலும் பரவாயில்லை எம்எல்ஏ பதவி இருக்கு

image

நெல்லை மாவட்டம் பாராளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பே தனது தேர்தல் பணியை தொடங்கினார். பிரதமர் மோடியே வந்து அவருக்காக பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 60,000 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். எம்பி போனாலும் அவருக்கு எம்எல்ஏ பதவிஇருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!