India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொக்கிரகுளத்தில் உள்ள நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் 2ம் கட்ட அறிவியல் பயிற்சி முகாம் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி நடக்கிறது. இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மாவட்ட அறிவியல் மையத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட அறிவியல் மைய அதிகாரிகள் இன்று (ஏப். 26) தெரிவித்தனர்.
பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இருவரை தாக்கியதாக 2019ல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் இழப்பீட்டு தொகையை ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரிடமும் சமமாக அரசு அபராதமாக வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று (ஏப். 26) உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் பல்வேறு நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்பொழுது நடைபெற்று வரும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அவர்கள் மாநிலங்களுக்கு செல்ல விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா இன்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அகத்தியர் அருவி, பாபநாசம் நகருக்குத் தெற்கிலும், கீழ் பாபநாசத்துக்கு வடக்கிலுமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவி நீரானது பாபநாசம் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அடைந்து, பின் அங்கிருந்து பாபநாசம் அணையின் நீர்பிடிப்புப் பகுதியைச் சென்றடைகிறது. அகத்திய முனிவருக்கு சிவன் பார்வதி இவ்விடத்தில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. நெல்லையின் பிரதான சுற்றுலாத் தலமாக இவ்வருவி உள்ளது.
மாநகராட்சி துணை ஆணையர் தாணுமூர்த்தி ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 25 ) மாநகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி கடைகளுக்கு தொழில் உரிமம் செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நடைபாதையில் பொதுமக்கள் இடையூராக வைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. புதிய 2024 -25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலை அறிவியல் கல்லூரிகள் தயாராகி வருகின்றன. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 ரிசல்ட் வர உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பாளை சேவியர் கல்லூரியில் இந்த ஆண்டு 3 புதிய பாடத்திட்டம் இளங்கலையில் அறிமுகம் ஆகிறது.
வண்ணாரப்பேட்டை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் சென்டரில் பயிலும் மாணவன் ஸ்ரீராம் இந்த வருடம் நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 65-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் முதன்மை கல்வி மற்றும் வணிக தலைவர் தீரஜ் மிஸ்ரா நேற்று (ஏப்.25)பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் நீடிக்கிறது மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், இப்போது அக்னி நட்சத்திரம் வெயில் போல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தொடர்ந்து தினமும் மாவட்ட முழுவதும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இந்நிலையில் இன்று திசையன்விளை, பாளையங்கோட்டை வட்டாரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவானது.
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்.25) செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஸ்டார் கோச்சிங் சென்டர் நடத்தும் மாபெரும் மாணவர்களின் கோடை கொண்டாட்டம்-2024 போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மே 3,4ம் தேதிகளில் நடைபெற்று பரிசளிக்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதன் முன்பதிவுக்கு 94869 78527 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி இன்று(ஏப்.25) அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.