India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற ஜூன் 8ம் தேதி பாளையங்கோட்டை தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டுவதை கண்டித்து, தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பொதுச்செயலாளர் அய்கோ இன்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜூன்5) பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தென்பகுதியில் உள்ள கூடங்குளம் உள்ளிட்ட சில இடங்களில் இன்று மாலை 6 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகிள்ளது. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்கி வரும் நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு அப்பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார். அவர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 90,019 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதுவே திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் சட்டப்பேரவை தொகுதி ஒன்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் ஆகும்.
திருநெல்வேலி மாவட்டம், கருப்பன்துறையில் நம்ம ஊரு நந்தவன திட்டத்தின் கீழ் மரக்கன்று நடப்பட்டது. கருப்பன் துறை அழியாபதீஸ்வரர் கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, நம்ம ஊரு நந்தவனம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 5) மரக்கன்றுகளை நட்டாா். அப்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இன்று (ஜூன் 5) வாழ்த்து பெற்றார். இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் 9ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்வானது நெல்லை ,பாளையங்கோட்டை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை ஆகிய 8 வட்டங்களில் 226 தேர்வு மையங்களில் 57787 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்ன மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ் – 5,02,296 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் – 3,36,676 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி – 89,601 வாக்குகள்
*நாதக வேட்பாளர் பா.சத்யா – 87,686 வாக்குகள்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் நீர் தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக இன்று (ஜூன் 5) காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். பாபநாசம் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்று வெற்றி சான்றிதழை பெறுவதற்காக செல்லும் முன் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில் மேயர், துணை மேயர், வாரிய தலைவர், மத்திய மாவட்ட பொறுப்பாளர், ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று (ஜூன் 4) வருகை தந்தனர். ஆனால் இவர்களை மாவட்ட ஆட்சியர் உள்ளே வருவதற்க அனுமதிக்கவில்லை. இதனால் இவர்கள் வெளியே நின்றனர்.
திருநெல்வேலி மக்களவை தேர்தலில் நான்கு பிரதான கட்சிகள் தவிர 19 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் 4 பிரதான கட்சிகளை அடுத்து பொட்டல் சுந்தர முனீஸ்வரர் என்ற சுயேச்சை வேட்பாளர் 19,852 வாக்குகளை பெற்று 5ஆம் இடத்திற்கு வந்தார். 6வது இடத்திற்கு நோட்டா வந்தது. 7,396 பேர் நோட்டாவிற்கு வாக்களித்தனர். 1788 வாக்குகள் தள்ளுபடி ஆகின.
Sorry, no posts matched your criteria.