Tirunelveli

News April 28, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News April 28, 2024

தடைக்கு பின்பு அருவியில் குவியும் மக்கள்

image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையில் நான்கு மாத தடைக்கு பின்பு தற்பொழுது குளிக்க வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்.28) விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

News April 28, 2024

தாழையூத்து பகுதியை சேர்ந்த வாலிபர் வெட்டிக் கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த சந்தனம் (32) என்ற கொக்கிகுமார் இன்று (ஏப்‌.28) காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாழையூத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 28, 2024

அரசு பள்ளியில் சிலம்பப் பயிற்சி முகாம்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிலம்பப் பயிற்சி முகாம் நடக்கிறது. நேதாஜி சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் 21 வயது மேற்பட்ட இரு பாலருக்கும் இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. மே.1முதல் 20ம் தேதி வரை தினமும் மாலை 5:30 முதல் 6:30 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சியாளர்
விவேகானந்தன் இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

துணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் மோசடி

image

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி நேற்று (ஏப்.27) நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவரின் பெயரில் முகநூல் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் கணக்கு துவங்கி பொதுமக்களிடம் உரையாடல் நடத்தி பணம் பறிப்பதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

களக்காடு புது தெருவை சேர்ந்தவர் யாபேஸ்(43) .இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு தனது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 27, 2024

டீக்கடைக்காரர் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

image

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் வேல்முருகன். இவர் மகன் பேச்சி (26) கடந்த வாரம் வெளியான யூபிஎஸ்சி தேர்வில் 576வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவரை பல்வேறு தரப்பினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News April 27, 2024

நெல்லை மாநகராட்சி ஆணையர் சலுகை அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று (ஏப்ரல் 27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து விதமான கட்டிடங்களுக்கும் 2024-25ஆம் ஆண்டு முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு அவரது சொத்து வரியில் இருந்து 5% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

மேலப்பாளையத்தில் முக்கிய சாலை மூடல்: போக்குவரத்து மாற்றம்

image

மேலப்பாளையத்தில் மிக முக்கிய சாலையான நேதாஜி சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் இன்று (ஏப்.27) துவங்கப்பட்டது. ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய்கள் பணிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் காவல் நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் போக்குவரத்து துவங்கும் என கூறப்பட்டுள்ளது.

News April 27, 2024

நெல்லையில் உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வித்துறையின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் இன்று (ஏப்.27) கோடை விடுமுறை வகுப்பு நடைபெற்று வருகின்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி தமிழகத்தில் தற்பொழுது மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதால் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!