India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று (ஆக.31) மாவட்ட அளவில் “பெற்றோரை கொண்டாடுவோம்” மாநாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை நாளை காலை 8 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நேரில் செல்ல முடியாதவர்கள் இதன் மூலம் பார்த்து மகிழலாம்.

மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு, ராபர்ட் ப்ரூஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தன் மீதான குற்றவியல் வழக்குகளையும் ராபர்ட் ப்ரூஸ் மறைத்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி,
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வரும் செப்.3ஆம் தேதி காலை 10 மணிக்கு பணகுடி ஷான் தாமஸ் மஹால் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று (ஆக.30) தெரிவித்துள்ளார்.

மாசு இல்லாத மின்சாரத்தை உருவாக்கும் சோலார் மின் உற்பத்திக்கு மின்வாரியம் முக்கியத்துவம் அளிக்கிறது. சோலார் மின் உற்பத்தி பேனர்கள் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் செயல்படுத்தி வருவதால், இதன் மூலம் மின் உற்பத்தி ஒவ்வொரு வாரமும் சாதனை படைத்து வருகிறது. 1 கிலோ வாட் சோலார் பேனல் மூலம் தினமும் நான்கு முதல் ஐந்து யூனிட் மின்சக்தியை உருவாக்க முடியும் என நெல்லை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலம், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று(ஆக.,30) தொடங்கியது. இந்த முகாமினை சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை MLA அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் அம்பை MLA இசக்கி சுப்பையா ஆகியோர் இன்று(ஆக.,30) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் செப்.,1 ஆம் தேதி பூலித்தேவரின் 309 ஆவது பிறந்தநாள் விழா நெற்கட்டான் செவல் நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜான் கல்லூரியில் வருகின்ற 31ஆம் தேதி பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நெல்லை மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுகவினர் செய்துள்ளனர்.

தாம்பரம் – நாகர்கோவில், நாகர்கோவில் – தாம்பரம் இடையே நெல்லை வழியாக வாரந்திர சிறப்பு ரயில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரயில், செப்.,1, 8, 15, 22, 29 & அக்., 6, 13, 20, 27 & நவ.,3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் நீடிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (ஆக.30) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தீர்க்குமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நேற்று (ஆக.29) விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் குறித்து சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. எஸ்பி சிலம்பரசன் பங்கேற்று பேசினார். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும். தகரத்தினால் கூரை அமைக்க வேண்டும். தீ தடுப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.